நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கண்ணனூர் இமயம் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம்

மு.இளங்கோவன், திரு.அ.ஆண்டி(செயலர்),ப.பெரியண்ணன்(தலைவர்),என். பானுமதி(முதல்வர்)

பயிலரங்கில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்


பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கண்ணனூர் இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(30.08.2013) காலை 11 மணியளவில் தொடங்கியது.

கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வை.இரமேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் என்.பானுமதி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் தலைவர் திரு.ப.பெரியண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் திரு. அ. ஆண்டி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். இமயம் கல்லூரியின் இயக்குநர் திரு. த. பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இமயம் பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் இராசசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சு.மணிவண்ணன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். திருமதி இர.உமா சாரதா நன்றியுரை வழங்கினார்.


கல்லூரி மாணவிகள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயிற்சி வழங்கினார். நாளையும்(31.08.2013) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. 
த. பிரபு (கல்லூரி இயக்குநர்)
மு.இளங்கோவன் உரை

கருத்துகள் இல்லை: