நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 ஜூன், 2013

நடவுப் பாடல்கள் ஒளிவட்டு அறிமுகம்…
அண்மையில் பொதிகைத் தொலைக்காட்சியில் நடவுப்பாடல்களைப் பாடி அறிமுகம் செய்தேன். தமிழகத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலண்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை வாழ் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிவட்டாக மாற்றி வழங்கி உதவும்படி அன்பு வேண்டுகோள் வைத்தனர். ஒளிவட்டில் இனி இந்த நடவுப்பாடல்கள் கிடைக்கும். வரும் அறிவன் கிழமை(புதன்) புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஒளிவட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுவையின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன் அவர்களும், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வெளியிட உள்ளனர்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆர்வமுடன் கேட்கும் நண்பர்களும், தமிழிசை ஆர்வலர்களும் இந்த ஒளிவட்டை வாங்கி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.

4 கருத்துகள்:

ppurush சொன்னது…

வாழ்த்துக்கள். தங்களுடைய உழைப்பை, நமது பாரம்பரிய கிராமிய பொக்கிஷங்களை காப்பதிலும் இது நல்லதொரு பங்கை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
-ப புருஷோத்தமன்.

ppurush சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

நமது பாரம்பரிய கிராமிய இசைப் பொக்கிஷத்தை வருங்காலத்திற்குக் கொண்டு செல்வதிலும் காப்பதிலும் இது ஒரு பங்காக அமையும் என்பதில் ஐயமில்லை.

-ப புருஷோத்தமன்.

ஹ ர ணி சொன்னது…

அன்பு இளங்கோவன்..

வணக்கம்.

வாழ்த்துக்கள்.

ஒளிவட்டு வெளியிட்ட பிறகு ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும். அதற்கான தொகையை எப்படி அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கவும்.

மேன்மேலும் வளர மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

வளரும்கவிதை / valarumkavithai சொன்னது…

அய்யா முனைவர் மு.இ. அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் குரலிசையில் வந்த பொதிகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண வாய்க்க விலலையே என்று மிகவும் வருந்தினேன். தற்போது தங்களின் பாடல் குறுவட்டும், நூல்வெளியீடும் நடக்க இருப்பதறிந்து மகிழ்கிறேன்.
வெளியீட்டுவிழாச் சிறக்கவும், விற்பனை நிறக்கவும் என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-4
http://valarumkavithai.blogspot.in/