நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 ஜூலை, 2013

முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு- வரவேற்புப் பதாகைமுனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்களின் வெளியீடு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 03.07.2013 மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்களும், புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து ஆண்டிராய்டில் வழங்கும் நிகழ்வும், நடவுப்பாடல்கள் ஒளிவட்டு வெளியீடும், பாவேந்தரின் முதல்பதிப்புகள் மின்பதிப்புகளாக வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன. தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். நிகழ்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி இலக்கிய வட்டத்தினர் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: