நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

குற்றாலம் பராசக்தி மகளிர்கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் பயிலும் மாணவர்கள் சற்றொப்ப நூறு பேருக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தமிழ் முதுகலை, எம்.பில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

 பயிற்சி நாள்: 02.02.2013, மற்றும் 03.02.2013(சனி, ஞாயிறு இரண்டு நாள்).
 நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை நடைபெறும்.

தொடக்க விழா  02.02.2013 காலை 10 மணி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை: முனைவர் சி.இராஜேஸ்வரி அவர்கள்
(முதல்வர், பராசக்தி மகளிர் கல்லூரி)

வரவேற்பு: முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் (தமிழ்த்துறைத் தலைவர்)

வாழ்த்துரை: திரு. எம். அன்புமணி அவர்கள் (கல்லூரிச் செயலர்)

பயிற்றுநர் உரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சு.மகாலட்சுமி அவர்கள்,தமிழ்த்துறை, பராசக்தி மகளிர் கல்லூரி
முனைவர் கோ.பாண்டிமாதேவி அவர்கள், தமிழ்த்துறை,பராசக்திமகளிர் கல்லூரி

தமிழக அரசு வழங்கியுள்ள மடிக்கணினியைப் பயன்படுத்தித் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ்த்தட்டச்சு செய்வது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுவது, தமிழ் மின்னிதழ்களுக்கு எழுதுவது, தமிழ் ஆய்வுத்தளங்களின் அறிமுகம், சமூகவலைத்தளங்களில் எழுதுவது என்று அனைத்துநிலைப் பயிற்சியும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் தமிழ் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை: