நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 அக்டோபர், 2008

மோகனூர் சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தமிழ் இணையப்பயிலரங்கம் அழைப்பிதழ்


முகவரிப்பகுதி

மோகனூர் சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தமிழ் இணையப்பயிலரங்கம் அழைப்பிதழ் எனக்கு இன்று வந்து சேர்ந்தது.அக்கல்லூரியின் உரிமையாளர் திரு.சு.பழனியாண்டி ஐயா அவர்களின் மகிழ்வுந்து ஓரிரு நாளுக்கு முன்பாக நேர்ச்சிக்கு உள்ளான மிகப்பெரும் துன்பச்சூழலிலும் தமிழ் இணையப்பயிலரங்கம் சிறப்பாக நடைபெற அவர்கள் காட்டிவரும் ஆர்வத்திற்குத் தமிழ் வலைப்பதிவாளர்கள்,தமிழ் இணைய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர்களாகிய நாம் அனைவரும் அவருக்கு மிகப்பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

அழைப்பிதழ் கண்டு உங்கள் அன்பான வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டுகிறேன்.


அழைப்பிதழ்

நிகழ்ச்சிநிரல்


பங்கேற்பாளர்கள் பதிய,தொடர்புகொள்ளவேண்டிய செல்பேசி எண் : + 93629 61815

4 கருத்துகள்:

தமிழ்த் தோட்டம் சொன்னது…

தமிழ் இணையம் குறித்த பயிலரங்க அழைப்பைக்கண்டு மகிழ்ந்தேன்.

//
கல்லூரியின் உரிமையாளர் திரு.சு.பழனியாண்டி ஐயா அவர்களின் மகிழ்வுந்து ஓரிரு நாளுக்கு முன்பாக நேர்ச்சிக்கு உள்ளான மிகப்பெரும் துன்பச்சூழலிலும் தமிழ் இணையப்பயிலரங்கம் சிறப்பாக நடைபெற அவர்கள் காட்டிவரும் ஆர்வத்திற்குத் தமிழ் வலைப்பதிவாளர்கள்,தமிழ் இணைய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர்களாகிய நாம் அனைவரும் அவருக்கு மிகப்பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
//

நிச்சயம் அவர்தம் தமிழ் ஆர்வமும், கடமையும் போற்றதற்குரியது.
வணங்குவோம்.
விழா சிறக்க வாழ்த்துவோம்.

அன்புடன் வெ.யுவராசன்

ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…

இனிதே நடைபெற வாழ்த்துக்கள் !

ச.இலங்கேஸ்வரன் சொன்னது…

erboy
அழைப்பிதழைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. பார்போம் காலச்சூழ்நிலை எம் நாட்டில் அமைதியானால் இதுபோன்ற பயிலரங்கங்களையும் இங்கு நிகழ்ச்சி ஆர்வமாயிருக்கின்றோம்.

gunathamizh சொன்னது…

வாழ்த்துக்கள் !