நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 அக்டோபர், 2008

தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் துயிலிடம்...


சிவப்பிரகாசர் துயிலிடம் முகப்பு

தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் தமிழ் இலக்கிய உலகில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் என அறியப்பட்டவர்.பதினேழாம் நூற்றாண்டினர்.வீரசைவ மரபினர்.சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்.அவர்தம் நூல்களுள் பிரபுலிங்கலீலை,நிரோட்டக யமக அந்தாதி,நால்வர் நான்மணிமாலை,நன்னெறி,திருவெங்கை உலா,சோணசைல மாலை,சீகாளத்திப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தனவாகும்.இவர்தம் நிறைவாழ்வுக் காலம் கடலூர் மாவட்டம் நால்லாற்றூரில் அமைந்தது.

நல்லாற்றூரில் உள்ள அவர்தம் துயிலிடம்(சமாதி) செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனைப் படம்பிடித்து வந்தேன்.மயிலம் மடத்தின் பாதுகாப்பில் அத்துயிலிடம் உள்ளது.முறையாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இடத்தின் சில படக்காட்சிகளைப் பதிவதில் மகிழ்கிறேன்.


சிவப்பிரகாசர் துயிலிடம்


சிவப்பிரகாசர் துயிலிடம் பின்புறம்

1 கருத்து:

happybalu சொன்னது…

vazhga valamudan nan sivaprakasa swamigal param barai yendru yen than thai solvar avar partri indru therinthu konden nandri happy_balu@yahoo.co.in