நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 4 ஜூன், 2013

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு நிகழ்வுகள்


பேராசிரியர் மன்னர்மன்னன் வரவேற்புரை

பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு கோலாலம்பூர் பேர்ல் இண்டர்நேஷ்னல் ஹோட்டலில் 03.06.2013  பிற்பகல் தொடங்கியது. மாலையில் பொது அமர்வில் முனைவர் கி. கருணாகரன் அவர்கள் கருத்தாடல் திறன்வளர்த்தலும் தமிழ்மொழிப் பயன்பாடும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இணை அமர்வுகள் நடைபெற்றன. மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து முனைவர் ந. தெய்வசுந்தரம், முனைவர் செ. சண்முகம், மு.இளங்கோவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் எஸ். கே. ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவிலிருந்து அறிவொளி திருவேங்கடம், ஜெயராதா, மொரிசீயசிலிருந்து செங்கண்ணன், கனடாவிலிருந்து இராஜரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் தொடக்கத்தில் முனைவர் மு.இளங்கோவன் தமிழக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினார். அதனை அடுத்துத் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து மாணவர்கள் வழங்கிய பன்முகப் பேச்சு நிகழ்ச்சி, முரசோவியம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியாவின் கல்வித்துறையின் துணைஅமைச்சர் மாண்புமிகு சி.கமலநாதன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


 04.06.2013 காலையில் மலேசியா பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் மாநாட்டு விழாக்குழுவின் சார்பில் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டினை மலேசியாவின் இயற்கைவளம், மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ கோ. பழனிவேல் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அமைச்சரின் சிறப்புரைக்குப் பிறகு  பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பேராசிரியர் செ.சண்முகம் அவர்கள் மொழி கற்பித்தல்என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்து எஸ்.கே.ஈஸ்வரன் தலைமையில் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் கணினித் தமிழும் தமிழ்மொழிக் கல்வியும்என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இணை அமர்வுகள் நடைபெற்றன

நாளை (05.06.2013) மாநாட்டின் நிறைவு விழா நடைபெற உள்ளது.

மாநாட்டுக் காட்சிகள்
அமைச்சர் கோ.பழனிவேல் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

அமைச்சர் கோ.பழனிவேல் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

பார்வையாளர்கள்

பொறியாளர் அறிவொளி ஆய்வுரை வழங்கல்

முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் செ.சண்முகம், மு.இ,முரசு, ம.இளந்தமிழ்

மலேசியா நாடக அறிஞர் முருகன் அவர்களுடன் மு.இ

எழுத்தாளர் கப்பார் கனிமொழி, மு.இளங்கோவன்

மு.இளங்கோவன் நாட்டுப்புறப் பாடல் வழங்கல்

1 கருத்து:

கவியாழி சொன்னது…

விழா சிறப்புற வாழ்த்துக்கள்