நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 மே, 2013

புதுவையின் பெண் பாவலர் பூங்கொடி பராங்குசம்


புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்கள்

புதுச்சேரியில் தொடர்ந்து தமிழ் இலக்கிய வினைபாடுகளில் முன்னிற்பவராகப் பூங்கொடி பராங்குசம் அவர்கள் விளங்குகின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த புதுவைச்சிவம், செகதாம்பாள் இணையருக்கு மகளாக 09.10,1946 இல் பிறந்தவர்.  

பூங்கொடி அவர்கள் தொழில்முனைவர் பராங்குசம் அவர்களை இல்லறத்துணையாக ஏற்றுத் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார். புலவர், பி.லிட், எம்.. பட்டங்களைப் பெற்று முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவர்களுக்குத் தமிழரசி செந்தில்குமார், எழிலரசி சிரிதர், , தமிழ்முத்து ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

பூங்கொடி அவர்கள் புதுச்சேரி அரசிடம் இயல்துறையில் கலைமாமணி விருது பெற்ற முதல் பெண் விருதாளர் ஆவார். இவர் புதுச்சேரியில் மரபுப் பாவில் நூல் இயற்றிய முதல் பெண்  கவிஞர் ஆவார்.

செய்பணி :
1.  இயக்குநர் - ஆனந்தா இரும்புத் தொழிலகம்
2.  நிறுவுநர் - இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்
3.  நிறுவுநர் அன்பு வட்டம் மகளிர் அமைப்பு                                                                                                 
4.  பொருளாளர் - ஆசிரியர் நலவாழ்வுக்குழு
5. பொருளாளர் - தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு.
6. செயற்குழு உறுப்பினர் - விவேகானந்தா சிறுவர் இல்லம்
7. இயக்குநர், முன்னாள் தலைவி - புதுச்சேரி இன்னர் வீல்சங்கம்.
8. துணைத்தலைவர் - நுண்கலைத் தமிழ்மன்றம்
9. துணைத்தலைவர் : தமிழ்த்தொண்டன் பாரதி  இலக்கியக் கழகம்.

பூங்கொடி பராங்குசம் பெற்ற விருதுகள்:

 புதுச்சேரி அரசின் கலைமாமணி  விருது.
புதுச்சேரி அரசின் பாரதியார் நூற்றாண்டு விழா விருது.
புதுச்சேரி அரசின் பாவேந்தர் நூற்றாண்டு விழாப்பட்டம்
புதுச்சேரி அரசின் காமராஜ் நூற்றாண்டு விழா விருது
புதுச்சேரி அரசின் விடுதலைப் பொன்விழா விருது
கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விருது
சூரிய விசயகுமாரி - துரை மாலிறையன் அறக்கட்டளையின் அன்னை தெரசா இலக்கிய விருது
வெற்றித் தமிழர் பேரவையின் (வைரமுத்து) விருது
புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெண்மணி விருது
மாவட்ட இன்னர்வீல் சங்க விருதுகள்
சிகரம் தொட்ட மகளிர் விருது
கவிதைப்பூங்கா (நண்பர்கள் தோட்டம்) மற்றும் பல்வேறு அமைப்புகள், அறக்கட்டளைகள் மூலம் வெள்ளிப் பாவரங்க விருது, இலக்கிய மாமணி விருது, செந்தமிழ்ச்சுடர் விருது,  தீந்தமிழ்த் தென்றல் விருது, கண்ணியச் செம்மல் விருது,  இலக்கியச் செம்மல் விருது போன்ற பல்வேறு விருதுகள்.

படைப்புகள் :

1.  வண்ண விளக்குகள் - மரபுக் கவிதை
2.  இலக்கியப் பொழில்
3.  மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச்சிவமும் பெண்ணியற் சிந்தனையும்
4.  புதுவைச்சிவத்துடன் பொன்னான நாட்கள்
5.  முத்தமிழ்ச் சுடர் முனைவர் இரா. திருமுருகனார் (ஆய்வு நூல்)

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரை வழங்குவதும், இலக்கிய அரங்குகளில் நடைபெறும் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் கட்டுரை வழங்குவதும் இவர் ஈடுப்பட்டுச் செய்யும் பணிகளாகும். புதுவையின் புகழ்மிக்க பெண்மணிகளுள் குறிப்பிடத்தகுந்தவர் இவர்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் முகவரி:   
  
"முத்தகம்''
23, அன்னை தெரசா தெரு, இராசா நகர்,
புதுச்சேரி - 13. தொ.பே. 2201129.
செல்பேசி : 9843224827.3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றிகள்...

இராய செல்லப்பா சொன்னது…

திருமதி பூங்கொடி பராங்குசம் சிறந்த கவிஞர் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தி. இப்படிப்பட்டவர்களை உலகுக்குக் காட்டும் தங்கள் முயற்சி அதைவிடவும் மகிழ்வூட்டுவது.

Soozhal சொன்னது…

திருமதி பூங்கொடி பராங்குசம் கவிஞர் புதுவை சிவத்தின் மகள் என்பதை அறிந்து புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என எண்ணி மகிழ்ந்தேன்.