நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 24 மே, 2013

பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த உரையிடையிட்ட பாட்டு சனிக்கிழமை ஒளிபரப்பு…வரும் சனிக்கிழமை(25.05.2013) இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் புதுவைக் களஞ்சியம் பகுதியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த என் பாட்டு உரை ஒளிபரப்பாகின்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.10 மணி முதல் 2.30 மணிவரை 20 நிமிடங்கள் இந்த பாட்டு உரை ஒளிபரப்பாகும். 134 நாடுகளில் பார்க்க வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் இணையம் வழியாகவும் பார்க்கலாம். 

இணையதள முகவரி:


இந்தச் செய்தியை நண்பர்கள், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், தமிழிசை ஆர்வலர்கள், தமிழ்ப்பண்பாட்டு மீட்பர்களின் பார்வைக்குக் குறுஞ்செய்திகள், பேசுபுக், டுவிட்டர், வலைப்பூக்கள் வழியாகக் கொண்டுசெல்ல வேண்டுகின்றேன்.

நிகழ்ச்சி குறித்த கருத்துகளை நண்பர்கள் எனக்குத் தெரிவிக்க மேலும் இத்துறையில் ஈடுபட்டு உழைக்க அவை உதவியாக இருக்கும்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி ஐயா...

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

கலையை வளர்க்கும் உங்களின் ஆவல் கண்டு மகிழ்ந்தேன் நானும் கூகிளில் பகிர்ந்தேன்

SRH சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா

நிச்சியம் நான் தங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன்