நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 29 மே, 2013

புதிய வரவுகள்…


முனைவர் மு.இளங்கோவன் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் பெயரில் நூலாக வெளிவர உள்ளது. இரு நூல்களையும் வயல்வெளிப் பதிப்பகம் வெளியிடுகின்றது.

2013, சூன் திங்கள் 7 ஆம் நாள் ( வெள்ளிக்கிழமை மாலை ) நூல்களின் வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சார்பில் நடைபெற உள்ளது. மலேசியாவின் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், எழுத்தாளர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் பணியாற்றும் திரு. மன்னர்மன்னன் அவர்களும், திரு. செல்வசோதி அவர்களும் ஆசிரியர் திரு. ம.முனியாண்டி அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

ஜோதிஜி சொன்னது…

எங்கள் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகளை எழுதி வைப்பதில் பெருமிதம் அடைகின்றோம். வளர்க உங்கள் பணி.

https://draft.kaviyazhi.blogspot.com சொன்னது…

உங்கள் எழுத்துப் பணி சிறக்கவும் மேலும் பலப் புத்தகங்களை இன்னும் வெளியிடவும் வாழ்த்துகிறேன்