நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 மே, 2013

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி பன்னாட்டுப் பாவரங்கம்வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், இலக்கியா பதிப்பகத்துடன் இணைந்து பாரதி பன்னாட்டுப் பாவரங்கம் என்னும் நிகழ்ச்சியை 09.06.2013, ஏலகிரியில் நடத்துகின்றது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கலாம்.

மரபுப்பா, புதுப்பா எதுவாக இருப்பினும் 25 வரிகளுக்கு மிகாமல் படைப்புகள் இருக்க வேண்டும். பேராளர் கட்டணம் 500 உருவா

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

பேராசிரியர் ப.சிவராஜி,
தமிழ்த்துறைத் தலைவர்,
இசுலாமியாக் கல்லூரி,
வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் - 635 752
செல்பேசி: 0091 9095831291
sivarajihodtamil@gmail.com

கருத்துகள் இல்லை: