நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 3 நவம்பர், 2011

சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குப் பெரியார் விருது
சிங்கப்பூரில் பலவாண்டுகளாகத் தங்கித் தமிழ்ப்பணியும் கல்விப்பணியும் புரிந்துவரும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஐயா அவர்களுக்குச் சிங்கப்பூரில் நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறும் விழாவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் சோம. இளங்கோவன், மா.அன்பழகன், வீ.கலைச்செல்வன்,க.பூபாலன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு விருந்தினராகத் திரு. விக்ரம் நாயர் அவர்கள் கலந்துகொள்கின்றார்.இந்த விழாவில் பெரியார் விருது பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்படுகின்றது.

3 கருத்துகள்:

VANJOOR சொன்னது…

இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.

ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

ANGOOR சொன்னது…

இவர் ஆத்திகவாதி, ஆன்மிகவாதி , எப்படி நாத்திகவாதிகள் இவருக்கு பட்டம் தருகிறார்கள் ....ம்ம்ம்

Balu சொன்னது…

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....

குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

See this site :
http://www.vallalyaar.com/