நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 நவம்பர், 2011

அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல்வெளியீட்டு விழாநினைவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூல்வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமிக் கோயிலில் எதிர்வரும் 11.12.2011 மாலை 5 மணிக்கு அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவுநிதியத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் மறைவுக்கு முன்பாக எழுதிமுடிக்கப்பெற்ற இந்த நூல் ஈழத்துத் தமிழர்கள் கப்பல்கட்டும் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் என்பதையும் மிகச்சிறந்த கடல்வாணிகம் செய்தவர்கள் என்பதையும் எடுத்துரைக்கும் நூல். அன்னபூரணி கப்பல் பற்றியும் அதனை உருவாக்கியத் தொழில்நுட்பக்கலைஞர்கள், அதனை விரும்பி விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் பற்றியும், அந்த அன்னபூரணி கப்பல் ஈழத்திலிருந்து அமெரிக்கா சென்ற வரலாறு பற்றியும் மிகச்சிறப்பாக அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதியுள்ளார்.

ஐயாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவரும் இந்தப் படைப்பைத் தமிழர்கள் ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.

நூல் வெளியீடு சிறக்க அறிஞர் ஈழத்துப்பூராடனார் தமிழகத்தில் தொடங்கிய பொன்மொழிப் பதிப்பகத்தின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

கருத்துகள் இல்லை: