நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 ஏப்ரல், 2011

ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


அழைப்பிதழ்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 17.04.2011 காலை 10.00 மணிமுதல் மாலைவரை நடைபெறுகின்றது.

மாணவர்களுக்கான குடிமைப்பயிற்சி முகாம் என்னும் தொடர்நிகழ்வில் ஒருநாள் நிகழ்வாக இது நடைபெறுகின்றது.

கல்லூரி விரிவுரையாளர் திரு வை.சுவாமிநாதன் அவர்கள் கொடியேற்றிவைக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. கணிப்பொறித்துறையின் விரிவுரையாளர் திரு.ம. இராச்மோகன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

கல்லூரியின் தாளாளர் திருநிறை இர.மு.பா.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரை வழங்க உள்ளார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து காட்சி விளக்கத்துடன் உரையாற்றுகின்றார்.

கல்லூரி இயல்அறிவியல் துறை விரிவுரையாளர் கலையரசி அவர்கள் நன்றியுரை வழங்குகின்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளைச் சௌபாக்யா கல்லூரியின் நிறுவனத்தினர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.


அழைப்பிதழ்

3 கருத்துகள்:

Venkatarangan TNC சொன்னது…

வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் கணினிப் பணி தொடர்ந்து பெருக வேண்டும்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஊக்க உரைகளுக்கு நன்றி ஐயா

pandian சொன்னது…

தமிழ் இணையவழி நம் தமிழ்மாணவன் முன்னேற்றம் காண அரசு செய்யும் வழிமுறைகள் என்ன என்ன என்பது பற்றி உரைத்தால் நலமாக இருக்கும். அறிய ... தெளிவு செய்வீராக.