நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 7 ஏப்ரல், 2011

திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரியில் தமிழ் இணையதளங்கள் அறிமுகம்


உருமு தனலெட்சுமி கல்லூரியின் வனப்புமிகு தோற்றம்

திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரியில் தமிழ் இணையதளங்கள் அறிமுகம் செய்யும் வாய்ப்பு 06.04.2011அறிவன்(புதன்) கிழமை பகல் 12 மணிமுதல் 1.30 மணி வரை எனக்கு அமைந்தது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சா.சேகர் அவர்கள் என் தமிழ் இணையப்பணியை நன்கு அறிந்தவர்கள். சென்ற ஆண்டு சிங்கப்பூர்,மலேசியா சென்றபொழுது என் பணிகளை உற்றுக் கவனித்தவர்கள்.

இந்தமுறை உருமு தனலெட்சுமி கல்லூரியில் முனைவர் பட்டம்,இளம் முனைவர் பட்டம் படிக்கும் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள் தமிழ் இணையப் பயன்பாடுகளைக்கொண்டு
தமிழ் ஆய்வை உலகத்தரத்திற்கு எவ்வாறு செய்வது என்ற நோக்கில் ஒரு பயிலரங்கம் நடத்த நினைத்தனர்.அதற்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர்.ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் ஆ.கருணாநிதி அவர்களும் ஏனைய துறைப்பேராசிரியர்களும் நிகழ்ச்சியை நன்கு வடிவமைத்திருந்தனர். உருமு தனலெட்சுமி கல்லூரியின் எழிலார்ந்த தோற்றமுடைய கலையரங்கில் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்த்தட்டச்சு தொடங்கி, இன்றைய தமிழ் இணைய வளர்ச்சியின் பல முனைகளைக் காட்சி வடிவத்துடன் எடுத்து விளக்கினேன். புதிய காலதரைத்(சன்னல்) திறந்துவிட்ட மனநிறைவில் மாணவர்கள் இருந்தனர். உரிய இடத்தில் தமிழ்ச்செய்திகள் பயன்பட்டனவே என்ற மன நிறைவு எனக்கும் ஏற்பட்டது. உருமு தனலெட்சுமி கல்லூரியின் முதல்வர் போல் தமிழ்நாட்டின்
கல்வி நிறுவனத்தார் தமிழ் இணையத்துக்கு முதன்மையளித்தால் தமிழ்க் கல்வியுலகில் இணையம் விரைவில் கோலோச்சும்.

பேராசிரியர் கோ.வீரமணி,பேராசிரியர் எ.இரா.இரவிச்சந்திரன், பேராசிரியர் விசயசுந்தரி உள்ளிட்ட பழகிய நண்பர்களைக் கண்டு உள்ளங்கலந்து பேசும் வாய்ப்பு அமைந்தது.


பேராசிரியர் சா.சேகர் அவர்கள்(முதல்வர்)


ஆய்வுமாணவர்களும் பேராசிரியர்களும்


ஆய்வாளர்களும்,பேராசிரியர்களும்

5 கருத்துகள்:

ஊரான் சொன்னது…

எனக்குப் பரிச்சயமான இடம், கல்லூரி என்பதால் அதிகம் எதிர்பார்த்து உள்ளே நுழைந்தேன்.

கருத்துக்களை அதிகம் வெளியிடலாமே!

எனினும் திருச்சியை நினைவூட்டியமைக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் தோழரே !!

அணில் சொன்னது…

தமிழாய்வில் கணினியை துணைகொள்ள, கணினியில் தமிழ் எவ்வாறு பாவிக்க வேண்டுமென பயிற்றுவிக்கும் தங்கள் சேவை போற்றுதற்குரியது. புதிய தலைமுறை இதழ் மூலம் தங்களை அறிந்து கொண்டேன். தங்களது தமிழ்ப் பணிக்கு மிக்க நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஊக்க உரை மொழிந்தமைக்கு நன்றி ஐயா.

chockalingam சொன்னது…

உருமு த,,கல்லூரியில்....
நல்ல செயல்களைத்தொடர்ந்து
செய்துவரும் திரு இளங்கோவன் அவர்களை வாழ்த்துவதோடு தொடர்ந்து இப்பணியைச்செய்ய வேண்டும்.
அ.சொக்கலிங்கம்.கமு;கல்மு;
ஆலவாய் சொக்கலிங்கம்.அறங்கோட்டை.