நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

புதுச்சேரி நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா

புதுச்சேரியில் நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா இன்று மாலை (16.04.2010) நடைபெறுகிறது.புதுச்சேரி இலப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்குச் சேவா சங்க அரங்கில் மாலை ஆறு மணியளவில் நடக்கும் விழாவில் செயராயரின் இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூல்வெயீடு நடைபெறுகின்றது.

அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் நூலை வெளியிடத் தமிழறிஞர் இரா.இளங்குமரனார் நூல் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகின்றார்.

முனைவர் க.தமிழமல்லன்,பாவலர் துரை மாலிறையன்,முனைவர் நா.இளங்கோ,முனைவர் அரிமளம் பத்மநாபன்,முனைவர் அறிவுநம்பி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பாராட்டுச் செய்தல் என்ற நிகழ்ச்சியில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் கலந்துகொண்டு இந்திய அரசின் செம்மொழி விருதுபெறும் முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கேசவ.பழனிவேலு ஆகியோரைப் பாராட்டுகின்றார்.

நண்பர்கள் தோட்டத்தின் தலைவர் ப.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றவும் பொதுச் செயலாளார் சுந்தரமுருகன் தொடக்கவுரையாற்றவும் புதுவையுகபாரதி இணைப்புரையாற்றவும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: