நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 மார்ச், 2009

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும். தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும். அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத் திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பயிலரங்கு சிறப்புற அமைய அனைவரும் ஒத்துழைக்கலாம்.

இது போன்ற பயிலரங்குகளை வாய்ப்பிருப்போர் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்) வழியாக நடத்தித் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கலாம்.

திருச்செங்கோடு பயிலரங்கு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.


இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, தமிழ்நாடு

நாள்: 14.03.2009,சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை: முனைவர் நா.கண்ணன்
அறிமுகவுரை : முனைவர் இரா.சந்திரசேகரன்

சிறப்புரை
புலவர் செ.இராசு,ஈரோடு

அமர்வு 1 :
தமிழும் இணையமும்

அமர்வு 2:
முனைவர் இரா.குணசீலன்
வலைப்பூக்கள் உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை (1.00-2.00)

அமர்வு 3:
முனைவர் மு.இளங்கோவன்
இணைய இதழ்கள்

அமர்வு 4
திரு.சரவணன்
இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு

அமர்வு 5
முனைவர் த.கண்ணன்
தமிழ் வலைப்பதிவுகள்

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்,
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு- 637 215
தமிழ்நாடு

செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் tamilchandru@yahoo.com


அழைப்பிதழ்


அழைப்பிதழ்

12 கருத்துகள்:

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ சொன்னது…

அன்புள்ள மு இளங்கோவன் அவர்களே மு இளங்கோவன் என்றாலே நல்ல விஷயங்களை முந்திக்கொண்டு செய்யும் இளங்கோவன் என்று பொருளோ
நற்காரியங்களை செய்கின்றீர்
வாழ்க பல்லாண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

தகவலுக்கு நன்றி. திருச்செங்கோடு பயிலரங்கு மிகச் சிறப்பான முறையில் நிகழ நல்வாழ்த்துகள்.

இணையத் தமிழை இன்றைய தலைமுறையினருக்கும் முந்தைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் உங்கள் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு தலை வணங்கி பாராட்டுகிறேன்.

தேவநேயன் - தோழமை சொன்னது…

ANNA VANAKKAM

YOU DOING VERY GOOD WORK TO OUR TAMIL COMMUNITY, KEEP IT UP
NANDRI
Devaneyan,Thozhamai

சுந்தரவடிவேல் சொன்னது…

நன்றி மு.இ.
பயிலரங்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்!

சுந்தரவடிவேல் சொன்னது…

நன்றி மு.இ.
பயிலரங்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்!

செல்வமுரளி சொன்னது…

கருத்தரங்கு மேலும் வெற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்

அறம் செய விரும்பு சொன்னது…

வாழ்த்துக்கள் முனைவர் .மு. இளங்கோவன். எனது இளம் அறிவியல் பட்ட படிப்பை கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தான் படித்தேன். இன்று மலேசிய புத்ரா பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக உள்ளேன். எனது தமிழ் ஆர்வத்தின் வளர்ச்சிக்கு அக்கல்லுரியின் தமிழ்த்துறையின் பங்கு முக்கியமானது. நல்ல பெரும் பேராசிரிய பெருமக்கள். ஐயா கார்த்திகேயன், மற்றும் சந்திரசேகரன் அனைவரும் மரியாதைக்கு உரியவர்கள்.

வாழ்த்துக்கள். உங்களின் வலைப்பூ தமிழ் சுரக்கும் தாய் மடியாகவும் மற்றும் உங்களின் தமிழார்வத்தில் தமிழ் வளர்க்கும் தாயுள்ளத்தையும் காண்கிறேன்.

பயிலரங்கு மிகச் சிறப்பான முறையில் நிகழ நல்வாழ்த்துகள்.

அன்புடன்
அறிவுடைநம்பி

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.அறிவுடைநம்பி அவர்களுக்கு
வணக்கம்
தாங்கள் புத்ரா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் செய்தியும், திருச்செங்கோட்டில் கற்றவர் என்ற செய்தியும் மகிழ்ச்சி தருகின்றன.

பேராசிரியர் பரமசிவம் ஐயா புத்ரா பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் பணிபுரிகிறார்.அவர் நல்ல நண்பர்.

தங்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன்.
மின்னஞ்சல் முகவரி தந்து உதவுங்கள்
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

அரியாங்குப்பத்தார் சொன்னது…

இணையப்பயிலரங்கு வெற்றியடைய வாழ்த்துகள்...

அறம் செய விரும்பு சொன்னது…

நன்றி,முனைவர் .மு. இளங்கோவன்,

மின்னஞ்சல் முகவரி: rosemaan@gmail.com

selventhiran சொன்னது…

அன்பின் இளங்கோவன்,

ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது பயிலரங்கம் குறித்த செய்திகள்.

அமர்வுகள் பட்டியலைப் படித்தாலே பயிலரங்கில் கலந்துகொள்ளும் ஆர்வம் மேலிடுகிறது. இன்றைய அன்றாடம் அதற்கு ஒத்துழைக்காது. ஆனபோதும் உங்கள் பயிலரங்கு வெற்றிகரமாக நிகழ்ந்தேற வாழ்த்துகிறேன்.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.

அருள் சொன்னது…

வ‌ண‌க்க‌ம் முனைவ‌ர் மு.இள‌ங்கோவ‌ன் அவ‌ர்க‌ளே!
நீங்க‌ள் த‌மிழுக்கு செய்யும் ப‌ல‌ தொண்டுக‌ளை க‌ண்டு நான் ஆன‌ந்த‌ம் அடைகின்றேன்.
நீங்க‌ள் செய்வ‌தோடு ம‌ட்டும் அல்லாம‌ல் ப‌ல‌ரையும் செய்ய‌ தூண்டுகின்றீர்.
இவ்வாரான‌ இணைய‌ ப‌யில‌ர‌ங்க‌ங்க‌ள் இணைய‌த்தில் த‌மிழின் ப‌ய‌ன்பாட்டை அதிக‌ரிக்கும்....
உங்க‌ள் த‌மிழ்த் தொண்டு மேன்மேலும் சிற‌க்க‌ வாழ்த்துகள்.