நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 மார்ச், 2009

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியது...

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 14.03.2009 காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.பேராசிரியர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புலவர் செ.இராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.திரு.டி.என்.காளியண்ணன் அவர்களின் திருமகனார் திரு டி.என்.கே இராசேசுவரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
முதல் அமர்வில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு முனவைர் குணசீலன் அவர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி உரையாற்றினார்.

பயிலரங்கிற்குத் திருவாளர்கள் இரவிசங்கர்(விக்கி),இராசசேகர தங்கமணி, செல்வமுரளி, விசயகுமார்(சங்கமம்) உள்ளிட்ட கணிப்பொறி வல்லுநர்கள்,ஆர்வலர்கள் வந்துள்ளனர்.மேலும் நாமக்கல்,கோவை மாவட்டத்தின் பல கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அமர்வு தொடங்கியுள்ளது.

3 கருத்துகள்:

சிவாஜி சொன்னது…

மதிப்பிற்குரிய இளங்கோவன் ஐயா,
பயிலரங்கம் மிகவும் திருப்தியாக இருந்தது. நான் காலதாமதமாக கலந்து கொண்டு (தமிழும் இணையமும் உரையிடையில்), 15 நிமிடம் முன்னதாகவே (சுரதா வலைதள அறிமுக ஆரம்பத்தில்)அவசர அழைப்பின் காரணமாக வந்து விட்டேன்.
ரவிசங்கர் மற்றும் செல்வமுரளி அவர்களின் விக்கிபீடியா பற்றிய விளக்கமும், வளைதள பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு விளக்கமும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுகொடுத்தன. மெலும் தமிழ் பேராசிரியர் ஒருவர் வாசித்த "வலைபூ உருவாக்கத்தில் தனிநபர் பங்களிப்பு" இன்னும் நிறைய விசயங்களை எனக்கு தெளிவு படுத்தியது. தனி பதிவாகவே அதை போடலாம் என்று கருதுகிறேன்.

இது போன்ற பயிலரங்கம் பரவலாக எல்லா கல்லூரிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். நிச்சயம் இது பயனுள்ளதாக அமையும்.

நன்றி!

-கணேசமூர்த்தி
ஈரோடு.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள் பேராசிரியர். நல்ல முயற்சி. தொடர்ந்து செயல்படுத்துங்கள். தவிற்க இயலாத காரணங்களினால் மாலை 3.30 மணியளவில் திரும்ப வேண்டி வந்தது. எனவே தங்களுக்கு தெரிவிக்க இயலவில்லை. மன்னிக்க. பேராசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆரூரன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் நடத்தி வரும் பயிலரங்கங்கள் பயனுள்ளவை. நேற்றைய நிகழ்வில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.