நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 மார்ச், 2009

குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம்-படங்கள்


குடந்தைக் கதிர்.தமிழ்வாணனின் பாவாணர் இல்லம்

குடந்தைப் பேருந்து நிலையத்தின் கீழ்ப்புறம் அமைந்துள்ள சான் செல்வராசு நகரில் கதிர்.தமிழ்வாணன் அவர்கள் பாவாணர் இல்லம் என்ற பெயரில் ஓர் இல்லம் எழுப்பி வாழ்ந்துவந்தார்கள்.தமிழ் உணர்வாளர்கள் சந்திக்கும் இடமாகவும்,குடந்தைப்பகுதியில் தமிழ்வளர்ச்சிப்பணிகள் நடைபெறும் நாற்றங்காலாகவும் அந்த இல்லம் விளங்கியது.

பல்லாயிரம் தமிழ் உணர்வாளர்கள் வந்து உரையாடிய பெருமைக்கு உரியது.தம் கொள்கை ஆசான் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பெயர் தாங்கிய அந்த இலத்தில் திரும்பும் திசையெல்லாம் தமிழ்மணக்கும்.அழகிய குறட்பாக்கள்,சங்க இலக்கியவரிகள் கண்ணில் தென்படும்.காண்போர் நின்று சிறிது நேரம் படித்துச்செல்லும்படி அந்த இல்லத்தின் சுவர்களை ஐயா அமைத்திருந்தார்கள்.சன்னல் என்பது போர்ச்சுகீசிய சொல் எனவும் காலதர் என அதற்கு நேரிய தமிழ்ச்சொல் நம் சிலம்பில் உள்ளது எனவும் விளக்க இரும்பில் படத்துடன் கூடிய அழகிய காலதரைப் பெரும் பொருட்செலவில் ஐயா செய்துவைத்திருந்தார்.

கிழமைதோறும் தமிழ் வகுப்புகள்,உரையாடல்கள் நடந்தன. திருக்குறள் ஓலிபரப்புகள் நாளும் தொடர்ந்தன.கணவனை இழந்த காரிகை போலும் அந்த இல்லம் ஐயாவின் குரல்ஒலி இன்றி இன்று வெறுமையாகக் காட்சி தருகிறது.கண்டார் மகிழ்செய்யும் சுவர் அறிவிப்புகள்


அஞ்சல் உள்ளிடும் அஞ்சல் புழை


கணியம் குறித்த அறிவிப்பும்,"மான்கண் காலதர்"விளக்கும் இரும்பு காலதரும்(சன்னல்)


நாளும் திருக்குறள் பரப்பும் கரும்பலகை


"பாவாணர் இல்லம்" என்ற பெயரில் அமைந்த கதிர்.தமிழ்வாணன் இல்லம்


தமிழ் அறிஞர்களின் படங்கள் தாங்கிய முகப்பு(ஒரு படத்தில் கதிர். ஐயா அமர்ந்திருக்க யான் அருகில் வெள்ளிக்கோப்பை,தங்கப்பதக்கத்துடன்)


பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் படம்

கருத்துகள் இல்லை: