நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 பிப்ரவரி, 2009

சென்னை வலைப்பதிவு நண்பர்களுக்கு வேண்டுகோள்!

சென்னை இலயோலா கல்லூரியில் பிப்ரவரி 12,13 நாள்களில் கணினி தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறுவதாக நேற்றுதான் அறிந்தேன்.முன்பே தெரிந்திருந்தால் கருத்தரங்கிற்குச் சென்று வந்திருக்கமுடியும்.

சென்னை வலைப்பதிவு நண்பர்கள் அந்தக் கருத்தரங்கிற்குச் செல்ல வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்பவர்கள் அங்குப் பேசப்படும் பொருள் பற்றியும் எந்த நோக்கில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்பது பற்றியும் உடனுக்குடன் பதிவிட வேண்டுகிறேன்.இயன்றால் வழக்கம்போல் படம்,காண்பொளி வசதியும் வழங்கலாம்.

பங்கேற்பு:

முனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் அனந்தகிருட்டினன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி
திரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்
திரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.
முனைவர் கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்
திரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, இலொயோலா கல்லூரி
திரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குநர், தேசியத் தகவல் நடுவம்
முனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி
முனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குநர், நியூ ஆரிசான் மீடியா
திரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்

இடம்:
இலொயோலோ கல்லூரி
இலாரன்சு சுந்தரம் கூடம்,
ஜூபிலி கட்டிடம், கீழ்த்தளம்,
சென்னை - 600 034
நாள்:
பிப் 12,13

2 கருத்துகள்:

Badri Seshadri சொன்னது…

நண்பரே: இந்தப் பயிற்சிப் பட்டறை, தகவல் தொழில்நுட்பம், கணினியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கானது. அவர்களது பட்டப் படிப்பு இறுதியாண்டு ப்ராஜெக்ட் தொடர்பானது. தமிழ்க் கணிமை தொடர்பாக என்னென்ன கல்லூரி மென்பொருள் ப்ராஜெக்ட்கள் செய்யலாம் என்பது பற்றிய தகவலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தருவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்.

கணித்தமிழ் சங்கம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி இணைந்து நடத்துவது.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பான தகவல் அனுப்பப்பட்டு, ரூ. 300 கொடுத்து பதிவு செய்துள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்கின்றனர்.

வலைப்பதிவர்கள் யாரும் கலந்துகொள்வார்களா என்பது சந்தேகமே.

Yuvaraj சொன்னது…

வணக்கம் அய்யா!
இதுகுறித்த தகவல் எமது தளாத்தில் உள்ளது காணவும்.

www.thamizhthottam.tk