அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் வாழ்ந்துவந்த மூத்த தமிழறிஞர் முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள் இன்று (31.12.2025) மாலை 4.30 மணிக்குத் தஞ்சை மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். பேராசிரியரின் உடல் நாளை (01.01.2026) மாலை திருமழபாடியில் நல்லடக்கம் செய்யப்படும். பேராசிரியர் அ. ஆறுமுகம் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். திருவள்ளுவருக்குத் தாம் வாழ்ந்த திருமழபாடியில் சிலை எடுப்பித்த பேரறிஞர்; பன்னூலாசிரியர். அரியலூர் மாவட்டத்தின் தமிழ் அடையாளமாக விளங்கிய பேராசிரியர் அ. ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
திருமழபாடி முனைவர் அ. ஆறுமுகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:
முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள் அரியலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சாத்தநத்தம் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் அமிழ்தம், அருணாசலம் ஆகியோரின் மகனாக 11.06.1933 இல் பிறந்தவர். 19 ஆண்டுகள் பள்ளியிலும், 19 ஆண்டுகள் கல்லூரியிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், திருவள்ளுவர் சிலை எடுப்பித்தும், தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தும் தொண்டாற்றியவர். 2010 இல் தாய் தந்த வாழ்க்கைத் தேன் என்ற தலைப்பில் விரிவான தன்வரலாற்று நூலை எழுதியவர்.
கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், தன்வரலாறு, வாழ்க்கை வரலாற்று நூல்கள், நாட்டுப்புற இலக்கிய நூல்கள், திருக்குறள் உரை, கட்டுரை நூல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இவர்தம் படைப்புகளை வெளியிட்டு வந்தவர். உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தவர். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்கும் வகையில் திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
முனைவர் அ.ஆறுமுகனாரின் தமிழ்க்கொடை
1. பூம்புகாரின்
புதுவரவு (1970)
2. பாவேந்தரின்
தமிழியக்கம் ஓர் ஆய்வு (1984)
3. நாட்டுப்புற
இலக்கியமும் பண்பாடும் (1984)
4. திருக்குறள்
நினைவாற்றல் வழிகாட்டி (1993)
5. குறள்
விருந்து (1993)
6. வாழ்க்கை
இலக்கியம் (1994)
7. சங்க
இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு (1994)
8. திருக்குறள்
நினைவேடு (1996)
9. வளர்தமிழ்
வழிகாட்டி (1996)
10. என்னையே நான்
(தன்வரலாறு), (1997)
11. பாவேந்தர் தந்த
பரிசு (1997)
12. சிலம்பும் நாட்டார்
உரையும் (1998)
13. திருக்குறளில் புதிய
பார்வை (1998)
14. ஊர்வல உணர்வுகள்
(1999)
15. ஆற்றங்கரைக் குயில்
(1999)
16. மணிக்குறள் நூறு
(2000)
17. வழியடைக்குங்கல்
(2000)
18. எண்ணித்துணிக (2000)
19. அகமும் அழகும்
(2001)
20. குயில் தந்த
முத்தம் (2001)
21. ஆந்திரங் கண்ட
அருந்தமிழ்(முனைவர் சிங்காரவேலர் வரலாறு)
(2001)
22. சிலம்பின் மூன்று
ஒலிகள் (2003)
23. தன்மானத் தமிழ்
மறவர் (2003)
24. கவிவேந்தரின் கருத்துச்சோலை
(2003)
25. பிறந்த மண்ணின்
பிடிவரலாறு (2004)
26. அந்தமிழ்கண்ட அந்தமான்(பயண நூல்) (2004)
27. வாழ்வியல் வளங்கள்
(2005)
28. திருக்குறள் கையேடு
(2005)
29. ஆ.செ.த.வாழ்க்கை வரலாறு
(2005)
30. படைப்புவேந்தரின் பன்முகப்
பார்வை (2006)
31. திருக்குறள் தெளிவும்
கருத்தும் (2007)
32. தமிழில் வெண்பா
இலக்கியங்கள் (2007)
33. அரசியல் இமையம்
அண்ணா (2009)
34. முந்துமா முதுமை,களப்பணித்தொகுப்பு (2009)
35. தமிழராய் வாழ்வோம்
(2010)
36. தாய் தந்த
வாழ்க்கைத் தேன் (தன்வரலாறு) (2012)
37. வண்டமிழ் வளர்த்த
வரதராசனார் (2011)
38. தமிழ் வரலாற்றில்
அரியலூர் மாவட்டம் (2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக