தகைசால் தமிழ்த் தொண்டர்கள் என்னும் தலைப்பில் 42 தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் அடங்கிய நூலொன்றினை எழுதியுள்ளேன். இந்த நூலின் கட்டுரைகள் இணையத்தில் நான் முன்பு எழுதியவற்றின் செம்மை வடிவம் ஆகும். நூல் அழகிய அமைப்பில் அச்சாக்கம் பெற்று, என் கையினுக்கு இன்று (19.12.2025) கிடைத்தது.
பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார், தொல்காப்பிய அறிஞர் கு. சுந்தரமூர்த்தி, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், முனைவர் இரா. திருமுருகனார், அறிஞர் ஆ. சிவலிங்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார், தமிழ்நூற் கடல் தி.வே.கோபாலையர், பாவலர் மணி ஆ. பழநி, பேராசிரியர் அடிகளாசிரியர், பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன், பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை, திருக்குறள் பெருமாள், கருப்பக்கிளர் சு. இராமசாமிப் புலவர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வும் பணியும் இந்நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூல் விரைவில் வெளியீடு காண உள்ளது.
328 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும்.
தேவைக்குத் தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல்: muetamil@gmail.com
பேசி
- புலனம்: + 91 9442029053

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக