நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 4 நவம்பர், 2015

பேராசிரியர் முனைவர் ஆ. வேலுப்பிள்ளை மறைவு!

முனைவர் ஆ. வேலுப் பிள்ளை

  ஈழத்துப் பேராசிரியர் முனைவர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் 2015 நவம்பர் 1 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிசுகோ நகரில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த துயருற்றேன்.

  பேராசிரியர் அவர்களின் நூல்களை மாணவப் பருவம் முதல் படித்துள்ளேன். இவர்களின் தமிழ்ப் பணிகளைச் சென்னையிலிருந்து வெளிவந்த  தமிழ் ஓசை என்ற நாளிதழில் 01.03.2009 இல் எழுதி வெளியிட்டேன். என் வலைப்பதிவிலும் பதிவானது.

 பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், அவர்தம் மாணவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.


பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களைப் பற்றி அறிய… இங்குச் செல்க

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள். உங்களுடன் நானும் சேர்ந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

எனது ஆய்வை உற்சாகப்படுத்திய அறிஞர் பெருமக்களில் இவரும் ஒருவர்.
அவர் 4.8.1999இல் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து ".............வணக்கம். உங்கள் 19/7 கடிதம் கிடைத்தது. பேராசிரியர் Peter Schalkஉடன் கலந்து உரையாடினேன். அவர் உங்களுக்கு டிதம் அனுப்பியிருப்பார். நீங்கள் அனுப்பிய புகைப்பட பிரதி தெளிவாக இல்லாததால், இது புத்தர்சிலைதானா என்ற ஐயம் ஏற்படுகிறது............"