நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 நவம்பர், 2015

தனித்தமிழ் அறிஞர் முனைவர் ந.அரணமுறுவல் மறைவு!

முனைவர் .அரணமுறுவல்

  உலகத் தமிழ்க்கழகத்தின் இந்நாள் தலைவரும், மிகச் சிறந்த தமிழறிஞருமான முனைவர் .அரணமுறுவல் அவர்கள் இன்று(06.11.2015) வைகறை 3 மணியளவில் நெல்லையில் உள்ள தம் மகள் இல்லத்தில், மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


  மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் கொள்கைகளைத் தம் கொள்கைகளாக வரித்துக்கொண்டு தமிழுக்குப் பாடுபட்ட பேரறிஞர் ந. அரணமுறுவலை இழந்து வருந்தும் குடும்பத்தினர், பாவாணர் பற்றாளர்கள், உலகத் தமிழ்க்கழகத்தார், முதன்மொழி ஆசிரியர் குழுவினர் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வருத்தம் உரியதாகும்.

 முனைவர் ந.அரணமுறுவலின் உடல் இன்று மாலை சென்னைக்கு எடுத்துவரப்பெற்று, நாளை நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புக்கு:

கி. வெற்றிச்செல்வன்- சென்னை, 9445207501

கதிர் முத்தையன், கடலூர் 9944478763

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்