நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 5 ஆகஸ்ட், 2015

ஹாங்காங் வானொலியில் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த என் நிகழ்ச்சி ஒலிபரப்பு…  ஹாங்காங் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் கிழமைதோறும் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 08.08.2015 சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த நிகழ்வில் என் பேச்சும் பாட்டும் ஒலிபரப்பாகின்றன. இந்த நிகழ்ச்சி தொலைபேசி வழியாக நேர்காணலாகப் பதிவுசெய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றது. ஹாங்காங் வானொலியின் வழியாக என் குரலை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்யும் நண்பர்கள் குழுவிற்கு நன்றி.

  உலகத் தமிழர்கள் இணையத்தின் வழியாக இந்த நிகழ்ச்சியைக் கேட்க இயலும்.


இணைப்பு முகவரி: சொடுக்குக

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

தங்களின் முயற்சியும் பணியும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.