நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 6 ஜனவரி, 2011

சென்னை இரகமத் அறக்கட்டளையின் இசுலாமியப் புத்தக நிறுவனம் திறப்பு விழா


அழைப்பிதழ்

சென்னையில் உள்ள இரகமத் அறக்கட்டளையின் சார்பில் இசுலாமியப் புத்தக நிறுவனம் (ISLAMIC BOOK CENTRE ) திறப்பு விழா வரும் ஞாயிறு (09.01.2011) மாலை ஆறு மணிக்குச் சென்னைக் கதீட்ரல் சாலையில் உள்ள சோழா ஓட்டலில் நடைபெறுகின்றது.

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் புத்தக நிறுவனத்தைச் சந்திரயான் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.

கவிக்கோ அப்துல் இரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் மேத்தா, பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர்.

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றார்.

மௌலவி சா.யூசுப் சித்தீக் மிசுபாகி அவர்கள் நன்றியுரை வழங்குவார்.

1 கருத்து:

யாவரும் கேளிர் சொன்னது…

ஒரு அபூர்வமான கூட்டணி
ஒரு அபூர்வமான கூட்டணியில் மயில்சாமி அண்ணாதுரை தமிழகத்தின் மிகப்பெரும் கவிஞர்களுக்கு மத்தியில் சேர்த்தது எது? தமிழா? அறிவியலா? அறிவியல் தமிழா? கிட்டத்தட்ட ஒரு பட்டிமன்றமே அங்கு நடந்தது. அற்புதமான ஒரு மாலை. எனது தமிழாசான் தலைமை தாங்க நான் திறந்து வைத்தத...
21 minutes ago · Unlike · Comment · Share
You, Naukri Currentopportunities and 3 others like this.
Dhana Sekar தோழமையுடன் ! தனசேகர் ,சந்தேகமேயில்லை உங்களையும் எங்களையும் இணைப்பது அறிவியல் தமிழே ! எத்தனையோ விஞ்ஞானிகள் இருந்தாலும் உங்களை எங்கள் சொந்தமாகக்கொண்டாட வைப்பது தமிழர் என்கிற இயல்புணர்ச்சியே.அறிவியல் வித்தகம் செய்த நீர் திறந்த புத்தகம் வளாகம் ,வளமாகும் என்றும் .காலை வணக்கம் .
10 minutes ago · Like