ஞாயிறு, 4 ஜூலை, 2010
முனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்களின் ஐரோப்பியக் கல்வி வளங்கள் நூல் வெளியீட்டு விழா
முனைவர் அ.பாலசுப்பிரமணியன் உரை
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்களின் ஐரோப்பியக் கல்வி வளங்கள் என்னும் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரித் தமிழ்ச்சங்கத்தில் இன்று(04.07.2010)மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
கல்விச்செம்மல் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் மைசூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுப் பாராட்டிப் பேசினார். மேலும் மாநில அளவில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும் பாராட்டிப் பேசினார். நூலின் முதற்படியைப் புரவலர் வேல்.சொக்கநாதன் அவர்கள் பெற்றுகொண்டார்.
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துரை.சம்பந்தம் அவர்கள்(புலமுதல்வர்) அவர்கள் வாழ்த்துரை வழங்க விழா இனிது நடந்தது.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்த பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் அங்கு உள்ள கல்வி முறைகளைக் கண்டறிந்து நம் கல்வி முறையில் செய்ய வேண்டிய, மேற்கொள்ளப்படவேண்டிய கல்வித்துறை மாற்றங்களை நமக்கு இந்த நூலில் விளக்கி எழுதியுள்ளார்.கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள்,மாணவர்கள் படிக்க வேண்டிய பயனுடைய நூல்.
முனைவர் அ.பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் அ.பாலசுப்பிரமணியன் உரை
மேடையில் அறிஞர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக