நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 ஜனவரி, 2010

எழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செய்தி...


மாலைமலர் செய்தி


தமிழ்ச்செம்மொழி மாநாடு பற்றி உலகத் தமிழர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ள நிலையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற ஒரு செயலைத் தமிழக அரசு மேற்கொள்ள ஒரு குழு அமைத்துள்ளதாகவும் இது பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் எழுத்துச்சீர்திருத்தம் கணிப்பொறிக்கு நல்லது எனவும் மாலைமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது(07.01.2010).

உலகெங்கும் உள்ள தமிழர்கள் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என்று கூறிவரும் நிலையில் அரசின் அறிவிப்பு பலருக்கும் உவப்பானதாக இல்லை.இது பற்றிய என் கட்டுரையை விரைவில் வெளியிடுவேன்.
மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி

சென்னை, ஜன. 7-

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத் துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.

அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கம்ப்ïட்டர்களில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

நன்றி:மாலைமலர் 07.01.2010

நேரடியாகப் படிக்க இங்கே

4 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

// கம்ப்ïட்டர்களில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
//
மேலோட்டமாக பார்க்கும்போது இது சரி என்று தோன்றலாம், ஆனால் கணிணி தமிழ் சார்ந்த சில முயற்சிகளை மேற்கொண்டபோது, இந்த எழுத்து சீர்திருத்தம் என்பது மேலும் சுமையாகத்தான் அமையும்... இது ஒரு தமிழ் எழுத்திற்க்கு மூன்று மடங்கு இடம்(memory space) அடைத்துக்கொள்ள தான் ஏதுவாகும்... மேலும் இதுவரை வெளிவந்த புத்தகங்கள் இணைய கணிணி கட்டுரைகளையும் மாற்ற வேண்டும்,சரி இதனால் முந்தைய எழுத்து சீர்திருத்தத்தால் கிடைத்த பலனை போல் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் அப்படியாக எதுவும் கிடைக்கப்போவதில்லை அதனால் இது தேவையில்லை

பனித்துளி சங்கர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் !

Unknown சொன்னது…

முனைவர் ஐயா அவர்களே,

இப்போது சிலர் மேற்கொண்டிருக்கும் எழுத்துச் சீர்மையானது எந்த வகையிலும் தமிழுக்கு ஆக்கமானதாக இருக்கவில்லை.

மாறாக, ஆழமாக வேறூன்றி வானுயர வளர்ந்துகொண்டிருக்கும் தமிழைச் சிதைக்கும் வஞ்சகச் செயலாகத்தான் இதனை எண்ண வேண்டியிருக்கிறது.

ஆகவே, எழுத்துச் சீர்மையை கைவிட வேண்டும். இல்லையேல், உலகத் தமிழர்கள் அணிதிரண்டு இந்த முயற்சியை முறித்துப் போட வேண்டும்.

வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கும் சிலர் வேறு எதாவது நற்செயல்கள் செய்வது பற்றி சிந்திக்கலாம்.. அவர்களுக்கு நல்ல எண்ணமும் மனமும் இருந்தால்!!!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க.

அரசு குழு அமைக்கும் அளவுக்குச் சென்றிருப்பது கவலை அளிக்கிறது :(