நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 12 ஜனவரி, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்,சனவரி 30,2010


அழைப்பிதழ்

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.

பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.

நிகழ்ச்சி நிரல்

5 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

நல்லது மகிழ்ச்சி அன்று கோவை பூ.சா.கோ. கல்லூரியில் கருத்தரங்கில் கருத்தாளராக பங்கேற்கிறேன். நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

இந்த தமிழ் இணையப் பயிலரங்கம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

புளியங்குடி சொன்னது…

மகிழ்ச்சி ஐயா

mani சொன்னது…

mikka mahizhchi!naalaia thalai muraikkum nam thamizh mozhi poichera vendum yenginra ungalin muyarchikku yen manamarndha vaazhthukkal
- Dr.M.Manimekalai
Madurai

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வாழ்த்துரைத்த நல்லுள்ளங்களுக்கும் முகப்பில் செய்தியை வைத்து ஊக்கப்படுத்திய தமிழ்வெளி தளத்திற்கும் நன்றியன்.
மு.இளங்கோவன்