நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஏப்ரல், 2008

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை


வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சி


மலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)


மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளன


நன்னனின் பழைய கோட்டை அமைப்பு

அறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை எழுதியுள்ளார். அன்னாரால் ஏறமுடியாதபடி அன்றைய நாளில் (1967 அளவில்) பாதை ஏந்துகளின்றிப், பாதுகாப்புக் குறைவுடன் இருந்தது.

இன்று மக்கள் போகவும் வரவும் ஆள் நடமாட்டத்துடன் பர்வதமலை என்ற பெயரில் திருவண்ணாமலை அருகில் நவிரமலை விளங்குகிறது. இம்மலையில் 15.08.2005 இல் என் மாணவர்கள் திரு.காசி.இரமேசு, திரு.செல்வம், திரு.விவேகானந்தன், பிற நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறி நன்னனின் கோட்டையையும் பழைய கோயிலையும் கண்டேன்.

நண்பர் அருணகிரிமங்கலம் திரு.சி.பாலாசி க.மு.,அவர்கள் எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கி மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, காட்சிகளைக் காட்டிப் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்து வந்தார்கள். சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை பற்றித் தினமணியில் எழுதியுள்ளேன் (18.12.2005). என் தளத்திலும் முன்பு வெளியிட்டுள்ளேன். மலைச்செலவு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன்.சில படக்காட்சிகளைச் சங்க இலக்கிய ஆர்வலர்களுக்கு வழங்குகிறேன்.

2 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

அவரவர்கள் ஒன்றுமே இல்லாததையெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழர்கள் நாம் தான் நமது வரலாறுகள் பற்றி அறியாமல் இருக்கிறோம்.

பல ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தாலும் அந்த இடச் சிறப்புகள் நமக்குத் தெரியாமல் பெயர் மாற்றம் செய்யப் பட்டு மறைக்கப் பட்டுள்ளன்.
அய்யா அ.ச.ஞானச்ம்பந்தன் சொன்னார்கள்.அவர் பிறந்த அரசன்குடி
கரிகால் பெருவளத்தான் கல்லணை கட்டும் போது அங்கே குடியிருந்தானாம்.தற்போது அங்கே கேட்டால் பலருக்குத் தெரியாது!

தங்கள் குழாமுக்கு பாராட்டுகள்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பாராட்டிற்கு நன்றி.
மு.இளங்கோவன்