நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 ஏப்ரல், 2008

சங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...


புதுப்பித்தலுக்கு முன் எடுக்கப்பெற்ற படம்


புதுப்பித்தலுக்குப் பிறகு எடுக்கப்பெற்ற படம்(11.02.2006)

சங்கப்புலவர் கபிலர் தம் அருமை நண்பர் வள்ளல் பாரியின் மறைவிற்குப் பிறகு அவனின் மக்கள் அங்கவை,சங்கவை இருவரையும் மலையமான் வழியினருக்கு மணம் முடித்து,திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் மேலே உள்ள படத்தில் உள்ளது.கபிலக்கல் என இவ்வூர்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தினமணி ஏட்டில்26.02.2006 இல் விரிவான என் கட்டுரை இடம்பெற்றது.இணையத்திலும் கட்டுரை உள்ளது

3 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

படங்களுக்கு நன்றிகள் ஐயா. நான் தற்போது எழுதிவரும் 'பாரி வள்ளல் - கபிலர்' தொடர்கதைக்கு இந்தப் படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமா?

http://koodal1.blogspot.com/2008/04/11.html

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
படங்கள் எடுக்கப்பட்ட என் தளத்தைக் குறிப்பிட்டு ஓர் இணைப்பும் வழங்க வேண்டுகிறேன்.

தங்கள் தமிழ் ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

குமரன் (Kumaran) சொன்னது…

அனுமதிக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் ஐயா. நீங்கள் சொன்ன படியே செய்கிறேன்.