நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 11 ஏப்ரல், 2008

சங்க காலத்து நவிரமலைப் படங்கள்


நவிரமலை உச்சியில் போகர் சிலை


அம்மையின் சிலை


மலைச்செலவில் ஈடுப்பட்ட குழுவினர்(மலையுச்சி)


காரியுண்டிக் கடவுள்


ஆபத்தான பாதையில் ஏறிவரும் என் மாணவர் கா.இரமேசு
(குறவரும் மருளும் குன்றம்)


நவிரமலையைக் கண்ட மகிழ்ச்சியில் நான்(மு.இ.)(மலையுச்சி)


கோயில் முகப்பு


மலைப்பாதை


மலையின் நடுவிடத்தில் ஓய்வெடுக்கும் மண்டபம்.

நவிரமலை (NAVIRAMALAI ) என்று சங்க காலத்திலும் (மலைபடுகடாம்) பர்வதமலை என இன்றும் அழைக்கப்படும் மலையின் மேல்பகுதியை விளக்கும் படங்கள். காரியுண்டிக்கடவுள் என்னும் சிவன்கோயில் மலைமீது உள்ளது. அம்மையின் சிலை, சிவலிங்கம், போகர்சிலை உள்ளன.

  இம்மலைக்கு முழுநிலா நாளில் மக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். கருங்கல்லில் உள்ள கோயில், கோட்டை அமைப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன. இப்பகுதியில் நடுகல் பல இருந்ததமையை மலைபடுகடாம் குறிப்பிடும். ஆனால் இன்று நம் காட்சிக்கு அவை கிடைக்கவில்லை. குறவரும் மருளும் குன்றக்காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

1 கருத்து:

குமரன் (Kumaran) சொன்னது…

நவிரமலை/பர்வதமலை காட்சிகளை நன்கு கண்டு களித்தேன். நன்றிகள். காரியுண்டிக்கடவுள் என்ற பெயர் சிவபெருமானுக்கு அமைந்த காரணமும் போகர் இந்தக் கோவிலில் இருக்கும் காரணமும் என்ன ஐயா?