நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 10 ஜூலை, 2015

கோவையில் அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியளிப்பு விழா-2015





  கோவையில் செயல்படும் அரவணைப்பு தொண்டு நிறுவனத்தின் சார்பில், கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா  12.07.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கோவை இரயில் நிலையம் எதிரில் உள்ள திவ்யோதயா அரங்கில் நடைபெறும் இவ்விழா முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. 

  பொறியாளர் கு. இளங்கோவன் அவர்கள் அனைவரையும் வரவேற்கின்றார். கு. இளங்கோவன் எழுதிய  A Layman’s Peak- reach என்னும் நூலைக்  காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ந. மார்க்கண்டேயன் அவர்கள் வெளியிடுகின்றார். திருமதி சுப்புலட்சுமி அவர்கள் நூலைப் பெற்றுக்கொள்கின்றார். தவத்திரு மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். திருவாட்டி தேவிகா இளங்கோவன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

திங்கள், 6 ஜூலை, 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்






  22015 செப்டம்பர் மாதம் 22.09.2015 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதுகலைத் தமிழாய்வுத்துறை, சார்பில் நடைபெற உள்ளது.

தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம் - கல்வி – வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் இப் பன்னாட்டுக் கருத்தரங்கில். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

ஆய்வார்வம் கொண்டோர் கலந்துகொண்டு கட்டுரை படிக்க அனைவரையும் முதுகலைத் தமிழாய்வுத்துறையினர் அழைக்கின்றனர்.


  • ஆய்வுக்கட்டுரை ஏ 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • பாமினி எழுத்துருவில் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் கட்டுரையை அனுப்பலாம்
  • பேராளர் கட்டணம் உருவா: 750 – 00 (அயல்நாட்டினருக்கு 12 டாலர்)
  • ஆய்வாளர்கள் உருவா – 500 -00 (அயல்நாட்டினர் 8 டாலர்)
  • கட்டணம், கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 01.09.2015

பேராளர் கட்டணம் திருச்சிராப்பள்ளியில் மாற்றும் வகையில் வரைவோலையாக Head, Department of Tamil, Jamal Mohamad College, Trichirapalli என்ற பெயரில் அனுப்பலாம்.

தொடர்புக்கு:

முனைவர் க. சிராஜூதீன்,
துணைப்பேராசிரியர்,
முதுகலை - தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620  020

தொலைபேசி: 0091 98657 21142
Jmctins2015@gmail.com