தொல் புதையல் என்னும் பெயரில் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் (சூலை – செப்டம்பர் 2026) இதழில் என் நேர்காணல் 14 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதனைக் கண்ணுற்ற மூத்த தமிழறிஞரும் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வருமான தமிழாகரர் தெ. முருகசாமி ஐயா என் முயற்சியைப் பாராட்டிச் சில வெண்பாக்களை மடல்வழி விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்கள். மரபுப் பாக்கள் புனைவோர் அருகிவரும் வேளையில் இவ்வெண்பாக்களை நண்பர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.
தொல்புதையல் நல்லிதழில் தங்களின் நேர்காணல்
பல்சுவைப் பாங்காகப் பார்த்திட்டேன்! – நல்ல
இளம்அறிஞர்
என்னும் எடுப்பான பேரை
வளமாகக் கண்டேன் அதில்!
“அன்னாய் இவனோர்
இளமாணாக் கன்”என்றே
சொன்ன
குறுந்தொகைச் சொற்களின் – பொன்னன்ன
வான்வரிச்
சான்றாய் வளர்ந்துள்ள தங்களைத்
தான்அறிவேன் நன்றாக நான்!
கோணல்நற்
கோணலென வாழ்வைப்பா ழாக்குகிற
சாணேறி
அந்தோ சறுக்கிடும் – மாணா
இளைஞர்கள்
சுட்டி இனிதாகக் கற்க
இளங்கோவே நல்லெடுத்துக் காட்டு!
எத்தனை
எத்தனை ஆன்ற அருஞ்செயல்கள்!
அத்தனை
தானும் அருமையென – இத்தரை
உள்ளோர்
உணர உழைப்பினது சின்னமாய்
உள்ளஇளங் கோவிற்கென் வாழ்த்து!
15.07.2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக