நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 மே, 2015

பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனார் உலகத் தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய இசைமேதை! கடலூரில் முனைவர் வி. முத்து உரை!


 முனைவர் வி. முத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள்.

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம் சார்பில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியிடப்பட்டுத் தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் முன்னிலையில் இன்று மாலை (16.05.2015) திரையிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புத் தலைவருமாகிய முனைவர் வி. முத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.  

பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் அறிமுகவுரையாற்றினார். அரங்க. இரகு, புலவர் மு. நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இந்த ஆவணப்படத்தின் தேவையையும், இந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் கூடுதல்படிகளை வாங்கி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

புதுச்சேரி, கடலூர் வாழும் தமிழார்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் குறித்து ஊடகங்களுக்குத் திரு.முத்து அவர்களின் செவ்வி.

திரு. மாரிமுத்து அவர்களின் உரை

பேராசிரியர் இரா..ச.குழந்தைவேலனார் ஊடகங்களுக்குச் செவ்வியளித்தல்

பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

செவ்வாய், 12 மே, 2015

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா



கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 16.05.2015 காரி(சனி)க் கிழமை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு நிகழ்வாகப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

தோழர்  அரங்க. இரகு அவர்கள் வரவேற்புரையாற்றவும், கல்விச்செம்மல் முனைவர் வெ. முத்து அவர்கள் தலைமை தாங்கவும் பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் அவர்கள் அறிமுகவுரையாற்றவும் உள்ளனர்.

  கவிஞர் செல்ல. கந்தசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரையாற்ற உள்ளார். புலவர் மு.நாகப்பன் அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்!

தொடர்புக்கு: 99420 61664 /  97153 23923