நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 மார்ச், 2007

சொல்லாய்வறிஞர் ப.அருளி

 சொல்லாய்வறிஞர் ப.அருளி அவர்கள் புதுச்சேரியில் பிறந்தவர். வணிகவியல், சட்டம் பயின்றவர். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச் சொல்லாய்வுகளில் இவருக்கு ஒப்புமைகாட்டமுடியாதபடி புலமைபெற்றவர். பன்மொழிகளை எடுத்துக்காட்டித் தமிழ்ச்சொல்லின் வேர் வளர்ச்சிகளை விளக்குவதில் வல்லவர். தூயதமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமூகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தின் தூய தமிழ்- சொல்லாக்க அகரமுதலிகள் துறையின் தலைவராகப்பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

பேராசிரியர் ப. அருளி அவர்களின்  நூல்களுள் சில:

1. இவை தமிழல்ல...

2. அயற்சொல் அகராதி

3. அருங்கலைச்சொல் அகரமுதலி

4. இரு வானொலி உரைகள்

5. யா

6. பெற்றோரைப் பற்றி...

7. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற ...அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்(5-தொகுதி)

முகவரி:
சொல்லாய்வறிஞர்  ப.அருளி அவர்கள்
காளிக்கோயில் தெரு, திலாசுப்பேட்டை,
புதுச்சேரி - 605009





வியாழன், 15 மார்ச், 2007

பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் அலைவு உழல்வு(Tamil Diaspora) பன்னாட்டுக்கருத்தரங்கம்-புதுச்சேரி
புதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னைப்பல்கலைக்கழகமும் இணைந்து தமிழர் அலைவு உழல்வு குறித்த கருத்தரங்கை 14,15,16-03-07 நாள்களில் நடத்தின. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கினர்.சங்க காலம் தொடங்கி இக்காலம்வரை தமிழர்களின் இடப்பெயர்வுக்கான காரணங்கள்,அதனால் பண்பாடு,வாழ்க்கைமுறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆராயப்பட்டன.அகதிகள் இந்தியாவில் நடத்தப்படும் முறைகள் விளக்கப்பட்டன.இணையம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எந்த வகையில் உதவுகின்றது என்பது ஆராயப்பட்டது.புலம்பெயர்ந்தோரின் நாடக முயற்சி,இலக்கியப்படைப்புகள்(கவிதை,புதினம்)மதிப்பீடு செய்யப்பட்டன.அறிஞர்களும்,ஆய்வுமாணவர்களும் மிகுதியாகக்கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மெளனகுரு,யோகராசா,சித்திரலேகா,மார்க்சு,சண்முகம்,கலாம்,சாக்கோப்சன்,மங்கை,உமாசங்கரி,சீனிவாசன் உள்ளிட்ட அறிஞர்கள் கட்டுரை படித்தனர்.முனைவர்குரோ,முனைவர் அரசு,கண்ணன் முயற்சியால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.செய்தி-மு.இளங்கோவன்,புதுச்சேரி பேசி-9442029053