நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வ.சுப. மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.சுப. மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் வ.சுப. மாணிக்கம், க. வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழா, நூல் வெளியீட்டு விழா! புதுவை முதலமைச்சர் வே. நாராயணசாமி பங்கேற்பு!


வ.சுப.மாணிக்கம், க.வெள்ளைவாரணனார் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்த புதுச்சேரி முதலமைச்சர் திரு. வே.நாராயணசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், க.வெள்ளைவாரணனார் மகள் திருவாட்டி மங்கையர்க்கரசி உள்ளிட்டோர்.

முனைவர் மு.இளங்கோவன்: அகமும் புறமும் நூலினை வெளியிடும் புதுச்சேரி முதலமைச்சர் திரு.வே.நாராயணசாமி அவர்களிடம் முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் திரு. ஏம்பலம் செல்வம், 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

தமிழறிஞர்கள் புடைசூழ புதுச்சேரி முதலமைச்சர்
 திரு. வே. நாராயணசாமி அவர்கள்

தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் போற்றப்படும் வகையில் ஆராய்ச்சி நூல்களை வழங்கிய வ. சுப. மாணிக்கம்,  . வெள்ளைவாரணனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவினைப் புதுச்சேரியில் உள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் நடத்தியது(11.02.2017). முனைவர் மு.இளங்கோவனின் பணிகளைக் குறித்து அறிஞர்கள் வழங்கியுள்ள மதிப்புரைகளின் தொகுப்பான முனைவர் மு.இளங்கோவன் அகமும் புறமும் என்ற நூலும் வெளியிடப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாக் காணும் தமிழறிஞர்களின் படத்தைத் திறந்து வைத்ததுடன், நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா. நிர்மலா நோக்கவுரையாற்றினார். சிவ. வீரமணி, புலவர் இ. திருநாவலன், புலவர் கதிர். முத்தையன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையில் விழா  நடைபெற்றது. மறைந்த தமிழறிஞர்களான கா. மீனாட்சிசுந்தரம், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியன், மணவை முஸ்தபா ஆகியோரின் மறைவுக்கு அக வணக்கம் முதலில் செலுத்தப்பட்டது.  

பேராசிரியர் தெ. முருகசாமி, முனைவர் இளமதி சானகிராமன் ஆகியோர் வ.சுப.மாணிக்கம் குறித்து உரையாற்றினர். பேராசிரியர் கு. சிவமணி க. வெள்ளைவாரணனார் குறித்து உரையாற்றினர்.

தமிழறிஞர்களின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தும், முனைவர் மு.இளங்கோவன்: அகமும் புறமும் என்ற நூலினை வெளியிட்டும் புதுச்சேரி முதலமைச்சர்  வே. நாராயணசாமி உரையாற்றினார்.

மக்கள் தொண்டர் திரு. ஏம்பலம் செல்வம், திருவாட்டி சிவகாமி நாயகர், தழல் ஆசிரியர் திருவாட்டி தா.பெ.அ. தேன்மொழி, திருவாட்டி இராசேசுவரி தமிழ்மணி ஆகியோர் நூலின் முதல் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார், விழாவில் வெளியிடப்பட்ட நூல் குறித்த திறனாய்வு உரையாற்றினார்.

தமிழறிஞர்கள் ம. இலெ. தங்கப்பா மொழிபெயர்ப்புப் பணிக்காகவும், கு.சிவமணி சட்டச்சொல் அகராதி உருவாக்கியமைக்காகவும், ப.அருளி தூய தமிழ் அகரமுதலி உருவாக்கப் பணிக்காவும்,  தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் கலிமண்டில இலக்கண நூல் உருவாக்கியமைக்காகவும் புதுச்சேரி முதலமைச்சாரால் சிறப்பிக்கப்பட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் முன்னைப் பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் க. வெள்ளைவராணனார் மகள் மங்கையர்க்கரசி, மருகர் மருத்துவர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். அரங்க. மு. முருகையன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முனைவர் மு. இளங்கோவன் நன்றியுரையாற்றினார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழா, நூல் வெளியீட்டு விழா



அன்புடையீர், வணக்கம்.

தமிழாய்வு உலகில் போற்றி மதிக்கத்தகுந்த அறிஞர்களான மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும்,  திருமுறைச்செல்வர் . வெள்ளைவாரணனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும் உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் நடத்த உள்ளோம். மேலும் முனைவர் மு.இளங்கோவனின் பணிகளைக் குறித்து அறிஞர்கள் வழங்கியுள்ள மதிப்புரைகளின் தொகுப்பான முனைவர் மு. இளங்கோவன் அகமும் புறமும் என்ற நூல்வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரி – 605 003

நாள்: 11.02.2017காரி(சனி)க்கிழமை,

நேரம்: அந்திமாலை 5.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை

இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை: மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம்
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்

நோக்கவுரை: முனைவர் இரா. நிர்மலா

முன்னிலை: திரு. சிவ. வீரமணி, புலவர் இ. திருநாவலன், புலவர் கதிர். முத்தையன், திரு. தூ. சடகோபன்

நினைவு வணக்கம்:
பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம்,
பேராசிரியர் தமிழண்ணல்
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன்
அறிஞர் மணவை முஸ்தபா
ஆகியோரின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்துதல்

வ.சுப.மாணிக்கம் குறித்த சிறப்புரைகள்:
தமிழாகரர் தெ. முருகசாமி
முனைவர் இளமதி சானகிராமன்

க. வெள்ளைவாரணனார் குறித்த சிறப்புரைகள்:
பேராசிரியர் கு. சிவமணி
முனைவர் அரங்க. பாரி

தமிழறிஞர்களின் திருவுருவப் படத்திறப்பும் நூல்வெளியீடும்:
திரு. வே. நாராயணசாமி,
மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி அரசு

நூல் மதிப்பீட்டு உரை:
முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

முதற்படி பெறுவோர்:
முனைவர் வி. முத்து
நாட்டியக் கலைஞர் திரு. இரகுநாத் மனே(பிரான்சு)
திருவாட்டி சிவகாமி நாயகர்
திருவாட்டி தா.பெ.அ. தேன்மொழி
திருவாட்டி இராசேசுவரி தமிழ்மணி

சிறப்பு அழைப்பாளர்கள்:
பேராசிரியர் மாதரி வெள்ளையப்பன் ( வ.சுப.மாணிக்கம் அவர்களின் மகளார்)
மருத்துவர் மு. திருநாவுக்கரசு, திருவாட்டி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு (க. வெள்ளைவாரணனார் மகளார்)

நன்றியுரை: முனைவர் அரங்க. மு. முருகையன்


தொடர்புக்கு: 0091 9442029053