மலேசியாவில், தெலுக் பங்ளிமா கராங்கு என்னும் ஊரில் வாழ்ந்து வந்த என் அருமை நண்பர் சொ. மாணிக்கம் அவர்கள் 02.05.2026 அன்று இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். நான் மலேசியாவுக்குச் செல்லும்பொழுது என் நெருங்கிய நண்பர்களுடன் உடன் வந்து, வானூர்தி நிலையத்தில் வரவேற்று, உரிய இடத்துக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வமுடன் துணைநிற்பவர். அதுபோல் வழியனுப்புவதிலும், அங்கு நடைபெறும் எமக்கான விழாக்களில் கலந்துகொள்வதிலும் பேரீடுபாடு காட்டுபவர். உற்றுழி உதவிய உயர்பெருந்தகையை இழந்து, கையற்றுக் கலங்குகின்றேன். அன்னாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
திருவாளர் சொ. மாணிக்கம் ஐயா அவர்கள் 07.04.1950 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சொக்கலிங்கம், மாரியம்மாள் ஆவர். தொடக்கத்தில் தோட்டத்தொழிலில் ஈடுபட்டு, படிப்படியாக உழைத்து முன்னேறித் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிறைவுக்காலத்தில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து, பல்வேறு சமூகப்பணிகளைச் செய்துவந்தவர். பிறருக்கு உதவுவதையும், துணை நிற்பதையும் தமது இயல்பாக அமைத்துக்கொண்ட பேருள்ளம் பெற்றவர்.
நற்குடும்பம்
பேணி, நிறைவாழ்வு வாழ்ந்து, சுற்றம் சூழ வாழ்ந்த சொ. மாணிக்கம் ஐயாவின் பெருமைமிகு
வாழ்வை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
வலப்புறக் கடைசியில் அமர்ந்திருப்பவர் திரு. சொ. மாணிக்கம் (கோப்புப் படம்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக