தமிழிசைக்குத் தொண்டு செய்த பண்ணாராய்ச்சி
வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தொண்டினை நினைவுகூரும்முகத்தான் தஞ்சாவூரில் அமைந்துள்ள
தமிழ்ப்பல்கலைக்கழகம் அன்னாருக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட உள்ளது. இத்தகு வரலாற்றுச்
சிறப்பு மிக்க நிகழ்வைக் கொண்டாட முன்வந்த
மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை ஐயா அவர்களையும் இசைத்துறைத் தலைவர் முனைவர்
இ. அங்கயற்கண்ணி அம்மா அவர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.
இவ்வரிய நிகழ்ச்சி கீழ்வரும்வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்
கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
நூற்றாண்டு
விழா நிகழ்விடம்: பேரவைக் கூடம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு
நாள்:
12.08.2014, செவ்வாய்கிழமை, நேரம்: முற்பகல் 10.30 மணி
வரவேற்பு:
முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள்,
தலைவர்,
இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
தலைமையுரை;
முனைவர் ம. திருமலை அவர்கள், துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழிசை
வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு நூல்வெளியீடு:
கலைமாமணி
முனைவர் ஈ.காயத்ரி அவர்கள், துணைவேந்தர், தமிழ்நாடு
இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம்
நன்றியுரை:
முனைவர் இரா. மாதவி அவர்கள்
தொகுப்புரை: முனைவர் செ. கற்பகம் அவர்கள்
கருத்தரங்க அமர்வுகள்
அமர்வு 1: 2.00 - 3. 30
தலைமை : முனைவர் எம். பிரமீளா அவர்கள்
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்
அமர்வு 2: 3.45 – 5.30
தலைமை: பேராசிரியர்
மா. வயித்தியலிங்கன் அவர்கள்
ஆய்வறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் படைப்புகள் குறித்தும்
, பணிகள் குறித்தும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.
2 கருத்துகள்:
விழா சிறக்கட்டும்
விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக