நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 11 அக்டோபர், 2010

காதல் தோற்ற போதினிலே!

அன்பை இழந்தேன்! அறம் இழந்தேன்!
அறிவை உணர்வை மிகஇழந்தேன்!
இன்பம் இழந்தேன்! கனவு இழந்தேன்!
இளமை ததும்பும் முகம் இழந்தேன்!
என்பை இழந்தேன்! சதைஇழந்தேன்!
இழுத்துப் போக்கும் மூச்(சு) இழந்தேன்!
கன்னல் சுவைதரு காதலியே! நம்
காதல் தோற்ற போதினிலே!

பெற்றோர் பாசம் மிகஇழந்தேன்!
பிணைந்த நண்பர் உறவுஇழந்தேன்!
உற்றோர்,உறவோர், ஊர்இழந்தேன்!
ஊக்கம், செயல்கள் பலஇழந்தேன்!
கற்றோர் அவையில் புயல்போலக்
கனன்று பேசும் பேச்சிழந்தேன்!
கற்றைக் குழலின் மதிமுகமே!நம்
காதல் தோற்ற போதினிலே!

2 கருத்துகள்:

Harani சொன்னது…

காதல் என்பது உண்மை அன்பின் வெளிப்பாடு. காதலால் எதையும் இழக்கலாம் அது உண்மை அன்பைப் புரிந்துகொள்ளாதபோது. நம்பிக்கை எல்லாம் மீட்டுத்தரும். கவிதைகள் வழி எதிர்பார்ப்பது இதுவே.

முனைவர் க.அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

முருகேசன் த/பெ ராமு சொன்னது…

காதலை இழந்தால் இவை அனைத்தையும் இழந்ததற்கு சமம் என்பதை கவிதையில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...

நன்றி:இரா. முருகேசன் அரபு எமிரேட்ஸ் ...