நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 22 மே, 2010

மலேசியா,பந்திங்,தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது...

மலேசியா,பந்திங்,கோலலங்காட் தமிழ்ப்பள்ளி -தலைமையாசிரியர் மன்றம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 23.05.2010 காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. திரு.முனியாண்டி அவர்கள் பயிலரங்க நோக்கத்தினை எடுத்துரைத்தார்.மலேசியா பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.மன்னர்மன்னன் அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.நான் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகிறேன்.

மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் தமிழாசிரியர்கள் ஐம்பது பேர் அளவில் கலந்துகொண்டுள்ளனர்.ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.தமிழ் இணைய அறிமுகம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.தேநீர் இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் மீண்டும் தொடர்கின்றது.

3 கருத்துகள்:

SARASWATHY சொன்னது…

உங்கள் பணி சிறப்புற வாழ்த்துகள்

ஓரு தமிழ் ஆசிரியனின் பயணம் சொன்னது…

தமிழ் இணையப் பயிலரங்கில் நானும் கலந்து கொண்டேன். என் சு.வாசு(ஆசிரியர்). இப்பயிலரங்கம் மிக நன்று. இப்பொழுது நான் தமிழிலேயே தட்டச்சு செய்து என் வலைப்பூவை உருவாக்கி வருகிறேன்.ஐயா அவர்களுக்கு நன்றி.வலைப்பூ உருவிக்கம் பற்றி இன்னும் அதிகமான விடயம் கிடைக்காமல் போனது மன வருத்தம் தான்.மீண்டும் சந்திப்போம் ஐயா. நன்றி.

மணக்கும் மலேசியன் சொன்னது…

பந்திங், சமூகக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொணவர்களில் நானும் ஒருவன். பயிற்சி நன்று. இருப்பினும், வ்லைப்பூ உருவாக்கம் பற்றிய பயிற்சி முழுமைப் பெறவில்லை.வ்லைப்பூ உருவாக்கத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு கண்டிருப்பீன் பயிலரங்கம் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் தங்களின் இப்பெரும் முயற்சிக்கு என்னுடையப் பாராட்டுக்கள்.நன்றி.