நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 16 மே, 2010

சிங்கப்பூரில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

சிங்கப்பூருக்கு 15.05.2010 காலை 7.40 மணியளவில் ஏர் இந்தியா வானூர்தியில் வந்து சேர்ந்தேன்.நண்பர் குழலி, கோவி.கண்ணன் ஆகியோர் வானூர்தி நிலையம் வந்து வரவேற்றனர்.இதற்கு முன் இணையம் வழியாகவே அறிந்திருந்தோம்.நேரில் பார்த்து மகிழ்ந்தோம்.உடனடியாக நாளை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்த்த ஏற்பாடு செய்வதாக முடிவு செய்தோம்.வானூர்தி நிலையத்திலிருந்து அவர்கள் விடைபெற்றனர்.

நான் வேறொரு கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை படைப்பதால் இன்று 16.05.2010ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திக்க உள்ளோம்.நண்பர் இரத்தின. புகழேந்தியும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.அதன் பிறகு இலக்கியக் கலந்துரையடல் ஒன்று தமிழ் அன்பரும் பாவாணர் அறக்கட்டளையின் நிறுவனருமான ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடக்க உள்ளது.

இடம்:பாவாணர் அரங்கம்,மருதப்பர் உணவகம்,42,கேம்பல் லேன்,சிங்கப்பூர்
நாள்:16.05.2010
நேரம்;மாலை 5.00 மணி
தொடர்புக்கு; 90405974 திரு.கோவலங்கண்ணன்(சிங்கப்பூர்)

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நேற்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கப்பூர் வருகையும் அதன் பின் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பும் நடந்தது

கவியின் கவிகள் சொன்னது…

அன்பு நண்பருக்கு வணக்கம். தங்களின் சிங்கை, மலேசியப் பயணம் வெற்றி பெறவும் தங்களின் தமிழ்ப் பணி அகிலம் முழுமையும் பயணிக்கவும் எனதினிய வாழ்த்துக்கள்.