நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 மே, 2010

மகிழ்ச்சி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா

மகிழ்ச்சி படத்தின் காட்சிகள்மகிழ்ச்சி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக விரைவில் நடைபெற உள்ளது என்று இயக்குநரும் மகிழ்ச்சிப் படத்தில் கதைத்தலைவராக நடிப்பவருமான வ.கௌதமன் தெரிவித்தார்.சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் வாழ்க்கையைத் தொடராக எடுத்துப் புகழ்பெற்ற வ.கௌதமன் நீல.பத்மநாபன் தலைமுறை புதினத்தை மகிழ்ச்சி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார்.ஒலிக்கோப்புப் பணிகளில் திரைக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.வித்யாசாகரின் இனிய இசையில் படம் மிகச்சிறப்பாக வெளிவர உள்ளது.படத்தின் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.

கருத்துகள் இல்லை: