பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றினை அறிவதற்கு மிகவும் துணைசெய்யும் நூல்.இந் நூலினை உ.வே.சா அவர்கள் 1904 இல் முதன் முதலாகப் பதிப்பித்தார்.இந்நூல் வெளியீட்டிற்கு முன் பல நூல்களைப் பதிப்பித்த பட்டறிவு இருந்ததால் இப்பதிப்பு முந்தைய பதிப்புகளைவிட சிறப்பாக உள்ளது.196 பக்கங்களில் நூல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. முகப்பு,இந்தப் புத்தகத்தில் அடங்கியவை,இந்தப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூல்கள் முதலியவற்றின் முதற்குறிப்புகள்,முகவுரை,கிடைத்த கையெழுத்துப் பிரதிகள்,நூலாசிரியர் வரலாறு,உரையில் கண்ட இலக்கணக் குறிப்பகராதி, பிழையும் திருத்தமும்,பதிற்றுப்பத்து மூலமும் உரையும்,பதிற்றுப்பத்துச் செய்யுளகராதி,பிரயோக விளக்கம்,அரும்பத அகராதி முதலியன என்னும் அமைப்பில் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
முன்பும் என் தளத்தில் நூல் பற்றிச் சில பதிவுகள் இட்டுள்ளேன்.படங்களைப் பயன்படுத்துவோர் மறக்காமல் இசைவுபெறுக.இணைப்பு வழங்குக.
என் மின்னஞ்சல் : muelangovan.gmail.com

பதிற்றுப்பத்து முகப்பு

பதிற்றுப்பத்து இரண்டாம் பக்கம்

முகவுரை

பதிற்றுப்பத்து மூலம்

பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து

பதிற்றுப்பத்து நான்காம் பத்து

பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து

பதிற்றுப்பத்து ஆறாம் பத்து

பதிற்றுப்பத்து ஏழாம் பத்து

பதிற்றுப்பத்து எட்டாம் பத்து
2 கருத்துகள்:
Akavum payanuLLa idukai. thambiI! thangkaLin uzhaippum muyaRchiyum idukaikaLin therivum ennaip peridhum makizhchchiyil AzhththukinRana.
-Devamaindhan
தங்கள் வாழ்த்திற்கு நன்றி.
தம்பி
மு.இளங்கோவன்
கருத்துரையிடுக