நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 மே, 2008

சிலப்பதிகாரம் உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு- படங்கள்

தமிழர்களின் கலையறிவு காட்டும் ஆவணம் சிலப்பதிகாரம் ஆகும்.இந்நூலின் முதற்பதிப்பை உ.வே.சா அவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே 1892 இல் கொண்டுவந்தார்.
அம் முதற்பதிப்பு இன்று காணுதற்கு அரிய பதிப்பாக உள்ளது.முதற்பதிப்பு எவ்வாறு இருக்கும் என அறிய விழைவார்க்குச் சில படங்களைப் பார்வைக்கு வழங்குகிறேன். இப் படங்களைப் பயன்படுத்துவோர் இசைவுபெற்றுப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
என் மின்னஞ்சல் முகவரி:
muelangovan@gmail.com


சிலப்பதிகாரம் முதற் பக்கம்


சிலப்பதிகாரம் இரண்டாம் பக்கம்


முகவுரை


முகவுரை


முகவுரை


அடியார்க்குநல்லார் உரையால் அறியலாகும் நூல்கள்


தொகையகராதி


விஷயசூசிகை


அரும்பதவகராதி


விளங்காமேற்கோள் அகராதி


சிலம்பு. கதைச்சுருக்கம்


சொல் விளக்கம்


சூசிபத்திரம்


சூசிபத்திரம்


சிலம்பு.அடியார்க்.உரை


உரைப்பாயிரம்


சிலம்பு புகார் காண்டம்


கானல்வரி


சிலப்பதிகாரம் அரும்பத உரை


சிலப்பதிகாரம் அரும்பத உரை

9 கருத்துகள்:

Steve Ballmer சொன்னது…

mahamahopadhyaya

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத ஐயர் என எழுதும்பொழுது தொடர் நீளும் என்பதாலும், மகாமகோபாத்தியாய எனபது வடசொல் ஆதலாலும் உ.வே.சா என்றால் அது அவர்களையே குறிக்கும் என்பதாலும் அவ்வாறு குறித்தேன்.
தங்கள் தமிழ் அன்புக்கு என்றும் நன்றியன்.

அன்புள்ள
மு.இளங்கோவன்

ரெங்கராசு சொன்னது…

இவற்றைப் பேணிக்காக ஏதாவது செய்யப்படுகிறதா?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.
அதற்கான என் முயற்சி இது.
மு.இ

கோபி சொன்னது…

இத்த்கைய அரிய நூல்களைப் பாதுகாப்பதோடு இவை தொடர்பான தகவல்களையும் இணையத்தில் வழங்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நா.கண்ணன் சொன்னது…

மிக அரிய முயற்சியிது. வாழ்த்துக்கள்.

பழம் ஓலைச் சுவடிகள், பழம் புத்தகங்கள் இவற்றைக் காக்க தமிழ் மரபு அறக்கட்டளை என்றொரு அமைப்பு மலேசியக் கோலாலம்பூர் நகரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

பழைய நூல்களை இருவகையில் மின்னாக்கம் செய்யலாம்.

1. புத்தகப் பிரதியாக படவடிவில் மின்னாக்கம் செய்வது.

2. எழுத்து வடிவில் மின்னச்சாக்கி மின்னாக்கம் செய்வது.

படவடிவில் சேகரம் செய்வதைத் தோண்டித்துழாவ முடியாது. உம். கூகுள் போன்ற தேடு இயந்திரங்களில் சொற்களைத் தேட முடியாமல் போய்விடும்.

எழுத்து வடிவில் சேகரம் செய்யும் போது அது தேடுபொறிகளின் பார்வையில் படும். கூடுத்தல் பயனளிக்கும்.

முதல் நடவடிக்கையாக தாங்கள் செய்வது போல் உயர் தெளிவு வடிவில் (குறைந்தது 300 DPI) படமாக வைத்தால், பின்னால் எழுத்தறியும் செயலி கொண்டு மின்னச்சாக எடுக்க முடியும். நல்ல நிதியிருந்தால் முதலிலேயே, ஒரு முழுப்புத்தகத்தையும் மின்னெழுத்தாக அச்சேற்ற முடியும்.

மறக்காமல் கீழுள்ள மூன்று முயற்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை
மின் தமிழ்
Project Madurai

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்.
மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.நா.கண்ணன் ஐயா அவர்களுக்கு
வணக்கம்.
எனக்கு உள்ள சிறு வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழ் நூல்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவேன்.
தங்கள் முயற்சியும்,மதுரைத்திட்ட முயற்சியும்,திரு.நா.கணேசன் அவர்களை ஒத்த அன்பர்களின் ஊக்குவிப்பும் இத்தகு பணிகளில் ஈடுபடச்செய்கிறது.

மு.இளங்கோவன்

அ. பசுபதி சொன்னது…

siRappAna uzhaippu! sIriya muyaRchi!!
-Devamaindhan