தமிழ்ப்பணியும் சமயப் பணியும் செய்துவரும் தருமபுர ஆதீனம் தொடர்ந்து தமிழ்த்தொண்டாற்றிவரும் அறிஞர்களுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர்களின் பெயர்களில் நினைவு விருதினை வழங்கிவருகின்றது.
புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினை தருமபுர ஆதீனத்தில் இன்று (29/08/2026) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம் வழங்கியது.
தருமபுர ஆதீனத்தின் இருபத்தேழாம் பட்டம், தவத்திரு முனைவர், கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்கள் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குத் ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பன்னிரு திருமுறை நூல் தொகுப்பு, திருக்குறள் உரைவளத் தொகுப்பு முதலியவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து ஆசி கூறினார்கள்.
முனைவர் மு. இளங்கோவன்
தமிழ் இணையத்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆற்றியுள்ள
பணிகளையும் பாராட்டும் வகையில் தண்டபாணி தேசிகர்
விருது தருமபுர ஆதீனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக