நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 ஜூன், 2017

தவத்திரு விபுலாநந்த அடிகளாரால் பாடப்பெற்ற பேரையூர் பொய்யாத விநாயகர் கோவில்...






புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த திரு. பெ. இராம. இராமன் செட்டியார் அவர்கள் திருக்கொள்ளம்பூதூர் ஆளுடைய பிள்ளையார் கோவிலுக்குச் சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன் இருபத்தைந்து இலக்கம் செலவு செய்து, புதுப்பித்துத் திருப்பணி செய்தவர். இவர்தம் முன்னோர்கள் காலம்தொட்டு, தம் வழிபடு தெய்வமாகப் பேரையூர் பொய்யாத விநாயகரை வழிபடுவது மரபு. புதுக்கோட்டைக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்குக் கோனூர் சமீன்தார் திரு. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுடன் வழிபாட்டுக்குச் சென்ற தவத்திரு விபுலாநந்த அடிகளார் பொய்யாத விநாயகர் மீது ’தேவபாணி’ என்ற பெயரில் தோத்திரப் பாவினை இயற்றினார். இப்பாடல் யாழ்நூல் அரங்கேற்றத்திற்கு விடைபெறுவதாக இருந்தது. எங்களின் ஆவணப் படப்பிடிப்பிற்காக  இக்கோவிலுக்கு அண்மையில் சென்றபொழுது பார்வையிட்டோம். கோவிலும், திருக்குளமும், அமைதி தவழும் மாளிகையும் அருகிருப்பன கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றோம். தமிழார்வலர்களின் பார்வைக்கு இதனை நினைவூட்டுகின்றோம்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பேரையூருக்கு நேரில் சென்றஉணர்வு
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

எனக்குத் தெரிந்தவரையில் தமிழகத்தில் பாம்புக்கோயில்கள் (நாகர்கோயில்) உள்ள நான்கு இடங்களில் (கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், கன்னியாகுமரி அருகேயுள்ள நாகர்கோயில், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில்)ஒன்றான இவ்வூரில் சென்று பேரையூரில் உள்ள நாகர்கோயிலைக் கண்டேன். ஆனால் இங்கு செல்லவில்லை. அடுத்த கோயில் உலாவில் அவசியம் செல்வேன். நன்றி.