புதுக்கோட்டை
மாவட்டம் நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த திரு. பெ.
இராம. இராமன் செட்டியார் அவர்கள்
திருக்கொள்ளம்பூதூர் ஆளுடைய பிள்ளையார் கோவிலுக்குச் சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன் இருபத்தைந்து
இலக்கம் செலவு செய்து, புதுப்பித்துத்
திருப்பணி செய்தவர். இவர்தம் முன்னோர்கள் காலம்தொட்டு,
தம் வழிபடு தெய்வமாகப் பேரையூர் பொய்யாத
விநாயகரை வழிபடுவது மரபு. புதுக்கோட்டைக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் இக்கோவில் உள்ளது.
இக்கோவிலுக்குக் கோனூர் சமீன்தார் திரு. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுடன் வழிபாட்டுக்குச்
சென்ற தவத்திரு விபுலாநந்த அடிகளார் பொய்யாத விநாயகர் மீது ’தேவபாணி’ என்ற பெயரில்
தோத்திரப் பாவினை இயற்றினார். இப்பாடல் யாழ்நூல் அரங்கேற்றத்திற்கு விடைபெறுவதாக இருந்தது. எங்களின் ஆவணப் படப்பிடிப்பிற்காக இக்கோவிலுக்கு அண்மையில் சென்றபொழுது பார்வையிட்டோம். கோவிலும்,
திருக்குளமும், அமைதி தவழும் மாளிகையும் அருகிருப்பன கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றோம்.
தமிழார்வலர்களின் பார்வைக்கு இதனை நினைவூட்டுகின்றோம்.
1 கருத்து:
பேரையூருக்கு நேரில் சென்றஉணர்வு
நன்றி ஐயா
கருத்துரையிடுக