நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 செப்டம்பர், 2016

கணக்கியல் அறிஞர் கோ. கோணேச பிள்ளைவிபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை அறிந்துகொள்ளும் நோக்கில் அண்மையில் இலங்கையின் மட்டக்களப்பை அடுத்த மண்டூருக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரில் வாழும் கணக்கியல் அறிஞர் கோ. கோணேச பிள்ளை(அகவை 87) அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. திரு. கோ. கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்தர் குறித்த நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது கணக்குத்துறையிலும் கணினித் துறையிலும் அவருக்கு இருந்த பேரறிவு புலப்பட்டது. இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். போட்சுவனா(Botswana) உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பல்வேறு நாடுகளின் கல்விநிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து கல்வியியல், கணக்கு உள்ளிட்ட துறைகளின் ஆய்வேடுகளை மதிப்பிட்ட பெருமைக்குரியவர். இவரைப் போன்ற அறிஞர்களைப் போற்றுவது நமது கடமை!


1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

நாங்கள் அறிந்திராத, ஆனால் அறிய வேண்டிய அறிஞரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.