நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்பு நிகழ்வு... 07.02.2016 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள தொண்டைமண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்புக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமணிநேரம் உரையாற்றும் வாய்ப்பு  எனக்கு அமைந்தது. சற்றொப்ப பதினைந்து உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவரும் தொல்லியல் ஆய்விலும், தொன்மைப் பொருள்களைச் சேமித்துப் பாதுகாப்பதிலும் வல்லுநர்கள். என் தமிழ்ப்பயணம், ஆய்வுகள், ஆவணப்படுத்தியுள்ள என் முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடினேன். திரு. கோபிராமன் அவர்களும் அவரின் நண்பர்களும் இந்த அரிய வாய்ப்பினை வழங்கினர்.


படங்கள் உதவி: திரு. கந்தன்

கருத்துகள் இல்லை: